புயல் வேகம்.. சென்னை மந்தைவெளியில் வேலையை முடித்தது ‘வைகை’.. முழுவீச்சில் நடக்கும் மெட்ரோ பணிகள்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் வைகை என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னை க்ரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி வரை 775 மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது 'வைகை' இயந்திரம்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் கிரீன்வேஸ் சாலை மற்றும் மந்தைவெளி நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் பிப்ரவரி 2024-இல் தொடங்கப்பட்டன. இந்த சுரங்கப்பாதை பணிகளுக்காக "நொய்யல்" மற்றும் "வைகை" என்று பெயரிடப்பட்ட இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. "வைகை" சுரங்கம் தோண்டும் இயந்திரம், பிப்ரவரி 2024-இல் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து 775 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி, இன்று, (அக்டோபர் 18, 2025) சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. இந்தச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை லார்சன் & டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் 75 கட்டிடங்களுக்கு கீழே சென்றது. இந்தக் கட்டிடங்களுக்கும், சுரங்கப் பாதைக்கும் இடையேயுள்ள மண் அடுக்கு 9 மீட்டரிலிருந்து 12 மீட்டர் வரை இருந்தது. மந்தைவெளி பகுதியில் ஏற்கனவே பல முக்கியமான அடிப்படை வசதிக் கட்டமைப்புகள் - அதாவது, கழிவுநீர் குழாய்கள், குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் ஆகியன இருந்தன. இதன் காரணமாக, சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டது.
வைகை சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெரும்பாலும் வண்டல் மண் / மணல் நிறைந்த நிலப்பரப்பைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. வைகை சுரங்கம் தோண்டும் இயந்திரத்தில் மொத்தம் 13 முறை அதன் வெட்டும் முகப்பில் (cutterhead interventions) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சுரங்கம் அமைக்கும் பணியை முடிக்க 610 நாட்கள் தேவைப்பட்டது.
இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் நொய்யல், மந்தைவெளி நிலையத்தை அடுத்த மாதத்தில் வந்தடையும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் ஏற்கனவே மூன்று இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நிறைவு செய்துள்ளது. முதலில் ஆர்.கே.சாலையில். அடுத்து கோடம்பாக்கத்தில் மற்றும் இன்று மந்தைவெளியில். வரும் மாதங்களிலும் இதுபோல் பல சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளன.
மந்தைவெளி வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவடைந்த நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), சி.செல்வம் (வழித்தடம்), CRE ஆலோசகர் சஞ்சீவ் மண்டல், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஜெயராம், திட்ட மேலாளர் அஹ்மத், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், லார்சன் & டூப்ரோ நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications