லிங்கை தொட்ட நீ கெட்ட.. சென்னை மாநகராட்சிக்கே அல்வா கொடுக்கும் கும்பல்.. நொடியில் பறிபோகும் பணம்
சென்னை: குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை அங்கீகரிக்கப்பட்ட முறைகள் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சில நபர்கள், தொலைபேசி வாயிலாக பொதுமக்களிடம் குடிநீர் - கழிவுநீர் வரி மற்றும் கட்டண நிலுவைத் தொகையை செல்போன் எண்ணுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் செலுத்துமாறு கேட்பதாக புகார்கள் வந்ததால் குடிநீர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னைப் பெருநகரப் பகுதிகளில் 1189 ச.கி.மீ.பரப்பில் வாழும் சுமார் 80 லட்சம் இணைப்புதாரர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் குடிநீரை வழங்குகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் கணிசமான இடங்களில் சென்னை மெட்ரோ தான் குடிநீர் வழங்கி வருகிறது. சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் வழங்குவதற்கு கட்டணம் விதிக்கிறது. அந்த கட்டணங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் செலுத்தி வருகிறார்கள். அதேபோல் கழிவுநீர் வாரியமும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்கள் செலுத்தும் விவகாரத்தில் மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "சென்னை குடிநீர் வாரியத்தால் அங்கீகரிக்கப்படாத சில நபர்கள், தொலைபேசி வாயிலாக பொதுமக்களிடம் குடிநீர் - கழிவுநீர் வரி மற்றும் கட்டண நிலுவைத் தொகையை அவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் செலுத்துமாறு கேட்பதாகவும், தவறும் பட்சத்தில் குடிநீர், கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறி பணம் பறிப்பதாக புகார்கள் வருகின்றன.
எனவே பொதுமக்கள் தங்களது நிலுவைத்தொகையை செலுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு நிலுவைத் தொகை செலுத்தக்கூறி, அங்கீகரிக்கப்படாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை நிராகரிக்க வேண்டும்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகள் வாயிலாக மட்டுமே வாரியத்துக்கு நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். எனவே சென்னை குடிநீர் வாரிய இணையதளமான www.cmwssb.tn.gov.in அல்லது நேரடி நிலுவைத் தொகை செலுத்தும் இணைப்பான https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login ஆகிய இணைப்புகளின் வாயிலாக செலுத்தலாம். குகூள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளில் உள்ள பயன்பாட்டு பில் செலுத்தும் வகையின் கீழ் CMWSSB தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பில் எண், செல்போன் எண்ணை உள்ளிட்டு பணம் செலுத்தலாம்.
காசோலை, வரைவோலை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் 15 பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் உள்ள வசூல் மையங்கள் வாயிலாக செலுத்தலாம். வசூல் மையங்களில் உள்ள கியூ -ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் செலுத்தலாம். சென்னை குடிநீர் வாரிய பணிமனை மேலாளர்கள் கொண்டு வரும் பி.எஸ்.ஒ. எந்திரங்கள் மூலம் செலுத்தலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications