அப்பாடா.. நிம்மதி.. சென்னையில் தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்! நாளை வழக்கம்போல் நீர் வினியோகம்
சென்னை: சென்னையில் இன்று தண்ணீர் லாரிகள் திடீரென ஸ்ட்ரைக் செய்தன. இதனால் பல இடங்களில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் நாளையும் ஸ்ட்ரைக் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களுக்கு மெட்ரோ குடிநீர் என்பது லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீர் நிலையங்களில் இருந்து பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னையில் சில இடங்களுக்கு சரியாக மெட்ரோ குடிநீர் சென்று சேரவில்லை என்ற புகார்கள் எழுந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக இன்றும் மேலும் சில இடங்களுக்கு மெட்ரோ குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. சென்னை கோடம்பாக்கம், தியாகராய நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் குடிநீர் செல்லவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகளின் உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கப்படாதது மற்றும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையங்களில் பழுதடைந்த நிலையத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் நாளையும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய போராட்டத்தின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே நாளையும் போராட்டம் நடக்கும்பட்சத்தில் தென் சென்னை முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தான் அதிகாரிகள் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினர். சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பழுதான நீர் நிரப்பும் நிலையத்தை இன்று சரிசெய்தனர். மேலும் லாரிகளுக்கு தாமதமின்றி நீர் நிரப்ப ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை லாரி உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் சென்னை மெட்ரோ குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதன்மூலம் நாளை வழக்கம்போல் சென்னையின் அனைத்து இடங்களுக்கும் மெட்ரோ குடிநீர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications