Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் சென்சாருடன் பொறுத்தப்படும் வாட்டர் மீட்டர்..இனி எப்படி இருக்கும் தண்ணீர் கட்டணம்.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம், சென்னையில் முக்கிய பகுதிகள், அதி முக்கியத்துவம் வாய்ந்த வணிக பகுதிகள், உயர் அடுக்குமாடி கட்டிடங்களில் தண்ணீர் மீட்டர்களை விரைவாக நிறுவ போகிறது. இந்த பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது.

சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் IoT சென்சார்கள் கொண்ட ஸ்மார்ட் மின்காந்த மீட்டர்களைத்தான் வணிக மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பொறுத்த போகிறது. இந்த சென்சார் மீட்டர்கள் எதற்கு என்றால், தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், தண்ணீர் கசிந்து வீணாவதை தடுக்கவும், தண்ணீர் திருடப்படுவதை தடுக்கவும் பொறுத்தப்படுகிறது.
வரும் 2025-26 ஆம் ஆண்டிற்குள் சென்னையின் 90% வணிக கட்டிடங்கள் மற்றும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்களுக்கு பொறுத்திவிட சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Chennai Metro water will install water meters in commercial and high-rise buildings from 2024

சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் வணிக மற்றும் உயரமான கட்டிடங்களில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் நீர் மீட்டர்களை நிறுவ விரும்புகிறது..இற்காக விரைவில் ஏலம் கோரப்படும் என்று அறிவித்துள்ளது. சென்னை நகர கூட்டுத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட போகிறது.

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்திற்கான ஸ்டெடி டாப்ஸ் என்ற ஆலோசகர் நிறுவனம் மூலம் விரிவான திட்ட அறிக்கைக்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களில் இந்த பணிக்கு டெண்டர் கோரப்பட உள்ளது. குடியிருப்புகள், வணிக தளங்களுக்கு எப்படி நீர் வழங்க வேண்டும் என்ற திட்டங்கள் தெளிவான திட்டமிடல் செய்த பின்னர், குறிப்பிட்ட பகுதிகளில் மொத்தம் ஒரு லட்சம் மீட்டர்கள் அமைக்கப்படும்.

இந்த மீட்டர்கள் முதலில் எப்படி அமைக்கப்படும் என்றால், ஆரம்பத்தில், வணிக பகுதி, நிறுவன மற்றும் உயர் அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தண்ணீர் அளவீட்டு திட்டத்தின் கீழ் மீட்டர் பொறுத்தப்படும். அதாவது அதிக நீர் பயன்பாடு உள்ள கட்டிடங்களுக்கு தற்போது நீர் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல் சென்னையின் முக்கிய பகுதிகளில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் தண்ணீர் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளது. ஆனாலும் தனிநபர் மெட்ரோ கனெக்சனை வைத்திருப்பவர்கள் அதாவது சாமானிய பொதுமக்கள் இந்த திட்டத்தால் எந்த பாதிப்பையும் சந்திக்க மாட்டார்கள். இத்திட்டம் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிக்கிறது.. எனினும் இரண்டின் பணிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும்.

இந்த திட்டத்தின் நோக்கம் ஒன்று தான். தண்ணீரை கண்டபடி பயன்படுத்தி வீணாக்கக்கூடாது. தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் கசிவுகள் அல்லது திருடப்படுவதை தடுக்கவும் இந்த IoT சென்சார்கள் கொண்ட ஸ்மார்ட் மின்காந்த மீட்டர்கள் நிறுவப்பட உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் 24,095 மீட்டர்களை பொறுத்தி உள்ளது. அதில் 12,708 மீட்டர்கள் தானியங்கி மீட்டர் ரீடிங்க் வசதி (AMR) கொண்டவை. வணிகநிறுவனங்கள், நீர்-அதிகம் பயன்படுத்துவோருக்கு இந்த மீட்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

புதிதாக பொறுத்தப்பட உள்ள AMR மீட்டர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் தண்ணீர் நுகர்வுக் கட்டணமாக ₹5-₹5.5 கோடியை வசூலிக்க முடியும். சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் சென்னை முழுவதும் 7.7 லட்சம் குடிநீர் இணைப்புகள் மூலம் நகருக்கு குடிநீர் வழங்கி வருகிறது. முக்கிய பகுதிகளில் மீட்டர் இல்லாத இணைப்புகள் உள்ள நுகர்வோர் மாதாந்திர குடிநீர் கட்டணமாக ₹84 செலுத்தி வருகிறார்கள். இதனிடையே 2025-26 ஆம் ஆண்டிற்குள் வாட்டர் மீட்டர் திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 90% வணிக மற்றும் உயரமான கட்டிடங்களில் தண்ணீர் மீட்டர் பொறுத்தப்பட உள்ளது.

இதுபற்றி தன்னார்வ அமைப்பான ரெயின் சென்டரின் இயக்குனர் சேகர் ராகவன் கூறுகையில், தண்ணீர் வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கு தண்ணீர் அளவீடு அவசியம். போதுமான அளவு மெட்ரோ வாட்டர் கிடைத்தால், மக்கள் நிச்சயமாக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்ச மாட்டார்கள்.. தண்ணீரை பொறுத்தவரை மழைக்காலத்தில் அது நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அளவிற்கு இருக்கிறது. எனவே இந்த நீர் மீட்டர்கள் மெட்ரோ வாட்டார் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை மக்கள் சரியாக பயன்படுத்த உதவும் என்றார்.

இதனிடையே AMI மீட்டர்கள் என்பது ஸ்மார்ட் மீட்டர்கள் ஆகும். உங்கள் மொபைலிலேயே ஆப் மூலம் எவ்வளவு தண்ணீரை பயன்படுத்தி உள்ளீர்கள் எவ்வளவு கட்டணம் என்பதை உடனடியாக பார்க்க முடியும் என்கிறார்கள். இதன் மூலம் தண்ணீர் பயன்பாட்டை அளவாக பயன்படுத்தி மாதாந்திர பில்லிங் சுழற்சி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க முடியும். ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்யவும் முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஏஎம்ஐ மீட்டர் பொருத்தும் பணி 2024ல் துவங்கி இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு சென்னையில் தண்ணீரை கண்டபடி பயன்படுத்த முடியாது மக்களே..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+