சென்னையில் சிஎம்எடிஏ போட்ட சூப்பர் பிளான்.. மொத்தம் 10 இடங்கள்..100 கோடியில் உருவாகும் அற்புதம்
சென்னை: சென்னையை ஏரிகளின் நகரமாக மாற்ற வேண்டும் என்று சிஎம்டிஏ விரும்புகிறது. அதற்காக நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், பட்டாம்பூச்சி பூங்காக்கள், ஆம்பிதியேட்டர், மியாவாக்கி காடுகள் என சென்னை மாநநகரின் முக்கியமான 10 ஏரிகளைச் சுற்றி பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்று அழைக்கப்படும் சிஎம்டிஏ 100 கோடி ரூபாய் செலவில் ஏரி முகப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளது.

100 கோடி ரூபாயில் சென்னையின் 10 ஏரிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு சிறந்த வடிவமைப்பு மற்றும் திட்டம் தொடர்பாக நிறுவனங்களுக்கு சிஎம்டிஏ போட்டி வைத்திருந்தது. இதில் 63 யோசனைகளை வந்தது. அதில் சிறந்த 6 யோசனைகளை செயல்வடிவத்திற்கு உருவாக்கும் பணியில் நிபுணர் குழு இறங்கி உள்ளது.
சென்னை நகருக்குள் ஏரிகளை ஒட்டி பசுமையான தோட்டங்களை உருவாக்குவது மட்டுமின்றி, அங்கு வசிக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் யோசனைகள் வந்துள்ளது. அதன்படியே திட்டங்கள் உருவாக்கப்படுகிறது.
சென்னை பெருநகரப் பகுதியில் (சிஎம்ஏ) 320 ஏரிகள் உள்ளன, அவை பாசன ஆதாரங்களாக உள்ளன, அவை வெள்ள வடிகால்களாக செயல்படுகின்றன. சிஎம்டிஏ, நீர்வளத் துறை (டபிள்யூஆர்டி), கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்திற்காக நீர்வளத் துறையின் கீழ் உள்ள 10 ஏரிகளை அடையாளம் கண்டுள்ளன.
பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல் மற்றும் கொரட்டூர் ஆகிய 10 ஏரிகளில் நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், பட்டாம்பூச்சி பூங்காக்கள், ஆம்பிதியேட்டர், மியாவாக்கி காடுகள் போன்றவற்றை உருவாக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது. தெலுங்கானாவில் நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதேபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதே பாணியில் சென்னை ஏரிகளை மேம்படுத்த சிஎம்ஏடி விரும்புகிறது.
சிஎம்ஏடி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"நாங்கள் கட்டிடக் கலைஞர்களிடமிருந்து வெவ்வேறு வடிவமைப்புகளைப் பெற்றுள்ளோம். இப்போது, CMDA, WRD, சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்பது சிறந்த பிளான்களை தேர்வு செய்யும். இதையடுத்து, அவற்றை மேம்படுத்துவதற்கான டெண்டர் பணிகள் தொடங்கும். பராமரிப்பு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும்.
ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், சிறப்பான பாதுகாப்பான இடங்களாக மாற்றுவதையும் இந்த ஏரிகள் சீரமைப்பு திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏரியின் நீரியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக கலாச்சார பாத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப உருவாக்கப்படும். உள்ளூர் மக்களும் இதில் ஈடுபடுவார்கள் என்றார்.
பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. ஏரிகளின் கரைகளை வலுப்படுத்துதல், நீர் தேக்கும் திறனை அதிகரித்தல், ஏரிகளைச் சுற்றியுள்ள நிலங்களை மீட்டெடுத்தல், நீர் மாசுபடுவதைத் தடுக்க கழிவுநீரின் மற்றும் நீரின் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் செய்யப்பட உள்ளன.

ஏரிகளின் மேம்பாடு இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீர்நிலைகளின் உண்மையான அளவைப் புரிந்துகொண்டு, அந்த பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிகளைதூர்வாருவதன் மூலம் அதன் கொள்ளளவை அதிகரிப்பது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்று நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தொழில்முறை நகர திட்டமிடுபவர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சதானந்த் கூறுகையில், "ஏரிகளை அழகுபடுத்துவது வரவேற்கத்தக்கது, ஆனால் திட்டம் மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இது மக்களுக்காக - பொழுதுபோக்கு மற்றும் நீர் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற பொறியியல் முன்னாள் பேராசிரியர் கே.பி. சுப்ரமணியன் கூறுகையில், சிஎம்டிஏ-வின் புதிய திட்டம் சுற்றுச்சூழல் தரத்தை மீட்டெடுக்கவும், சமூக-பொருளாதார பலன்களை வழங்கவும் நிச்சயம் உதவும். ஆனால் ஏரி ஓரங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதே இதன் நோக்கமாக இருக்கிறதோ என்று கேள்வி எழுப்பினார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications