குட் நியூஸ்.. விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரம்.. புதிதாக சேர்க்கப்பட்ட கிராமங்கள்.. ஏன் முக்கியம்?
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை பெருங்காரத்திற்குள் புதிதாக பல கிராமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
சென்னையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த சில வருடங்களாகவே நடந்து கொண்டு இருக்கின்றன. அனைத்து திட்டங்களும் சென்னையில் ஒரு சில இடங்களுக்குள் குவிவதற்கு பதிலாக அருகாமையில் இருக்கும் மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் சென்னை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல், மக்கள் தொகை ஆகியவற்றையும் இடநெருக்கடியையும் கட்டுப்படுத்தும் விதமாக இந்த விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை
சென்னை தற்போது 1189 சதுர கிலோ மீட்டர் அளவில் உள்ளது. இது பெங்களூரின் அளவை விட அதிகம் ஆகும். பெங்களூர் நகரம் 741 சதுர கிலோ மீட்டர் கொண்டது. இந்த நிலையில்தான் சென்னையை 4 மடங்கிற்கும் மேல் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சென்னையை 5,904 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

உருமாற்றம்
முன்னதாக சென்னையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டை சேர்ந்த சில கிராமங்கள் இடம்பெற்று இருந்தன. தற்போது காஞ்சிபுரத்தில் மேலும் சில கிராமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதேபோல் செங்கல்பட்டை சேர்ந்த பல கிராமங்கள் சென்னை பெருநகரத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. ராணிப்பேட்டையை சேர்ந்த கிராமங்களும் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளன. திருவள்ளூரில் இருந்தும் பல கிராமங்கள் இந்த லிஸ்டில் இணைக்கப்பட்டு உள்ளன.

கிராமங்கள்
அதன்படி மொத்தமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் இருந்து 1225 கிராமங்கள் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளன. சென்னையின் வளர்ச்சியை மனதில் வைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையின் பல்வேறு நீர் நிலைகளை மனதில் வைத்தும், மக்கள் தொகையை மனதில் வைத்தும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையின் வளர்ச்சி இன்னும் எளிதாகும்.

பரந்தூர்
முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையம் அதிக நெருக்கடி கொண்ட விமான நிலையமாக மாறிவிட்டது. இதன் காரணமாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று 15 வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னையில் இரண்டாவது விமானம் நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரும் சென்னை பெருநகர் கட்டுப்பாட்டில் இனி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications