சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம்
சென்னை: சென்னையில் பயணிகள் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், "டபுள் டெக்கர் ரூப் டாப் ஓப்பன் பஸ்களை" இயக்க திட்டமிட்டது. அதாவது இரண்டு அடுக்கு கொண்ட பேருந்தின் மேல் பகுதி திறந்த வெளியாக கொண்ட வடிவமைப்புடன் கூடிய பேருந்தை இயக்க போக்குவரத்து முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் அடிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதமாகவும் சென்னை நகரின் போக்குவரத்து கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை போக்குவரத்து வசதி
சென்னையில் நவீன தாழ்தள பேருந்துகள், மின்சார பேருந்துகள், ஏசி பேருந்துகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அண்மையில், சொகுசு பிரீமியம் பேருந்து சேவையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்தது. கண்டக்டர் இல்லாத இந்த பேருந்தில், சென்னை ஒன் செயலி வழியாக டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிக்க முடியும்.
சென்னை திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலும், நாவலூர் சிறுசேரி ஐடி பார்க்கில் இருந்து சென்னை கோயம்பேடு வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் இந்த பீரிமியம் கோல்டன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சென்னையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக உலா பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.
ஓபன் டாப் பேருந்துகள்
சென்னை மெரினா, எழிழகம் வழித்தடத்தில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. சென்னையில் முக்கிய சுற்றுலா மையங்களை பார்க்கும் விதமாக இந்த பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் வெளிநாடுகளில் இயக்கப்படுவது போல ஓபன் டாப் பேருந்துகளை இயக்குவதற்கும் அரசு முடிவு செய்தது. இரண்டு அடுக்கு கொண்ட இந்த பேருந்தில் மேல்பகுதியில் திறந்த வெளியுடன் சென்னை அழகை ரசித்தபடி பயணம் செய்யும் விதமாகவும் இயக்க முடிவு செய்யப்பட்டது.
கேரளாவின் மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் இயற்கை அழகை ரசித்தபடி செல்ல இதுபோன்ற ஓபன் டாப் பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்ற பயண அனுபவத்தை சென்னை பயணிகளுக்கு கொடுக்கவும் திட்டமிட்டு இந்த வகை பேருந்துகளை இயக்குவது தொடர்பாக சென்னை மாநரக போக்குவரத்து கழகம் பரிசீலித்து வந்தது.
திட்டம் கைவிடப் பட்டது
எனினும், சென்னையில் நிலவும் தட்ப வெப்ப நிலை ஓபன் டாப்பில் பயணிகளுக்கு ஏற்றதாக இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதால் இதனை ஏற்று திட்டத்தை கைவிட்டுள்ளது. இடத்திற்கு பதிலாக 20 டபுள் டெக்கர் ஏசி பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களுக்குள் இந்த பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் விதமாகவும் பேருந்துகள் நவீன வடிவமைப்புடன் செயல்பட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 4 நான் ஏசி ரூப் டாப் பஸ்களையும் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் பஸ் ஆபரேட்டர்களுக்கு பணம் வழங்கப்படும். பேருந்துகளை இயக்குவது மட்டும் இன்றி பராமரிப்பு, சார்ஜிங் உள்கட்டமைப்பு உருவாகுதல் ஆகியவையும் ஆபரேட்டர்களின் பொறுப்பேயாகும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் முதலில் வெளியிடப்பட்ட நிலையில், அதை மாற்றம் செய்து கடந்த மாதம் மீண்டும் டெண்டர் விடப்பட்டது.
முதலில் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தில் டபுள் டெக்கர் மின்சார பேருந்துகள் மட்டுமே திட்டமிட்டு இருந்தன. ஏசி பேருந்துகளுக்கு ஒரு கட்டணமும் ஓபன் டாப் பேருந்துகளுக்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஓப்பன் ரூப் டாப்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications