Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்க ரதம் என்று சொல்லப்படும் ஏசி சொகுசு பஸ்களை எம்.டிசி அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களிலும் இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களிலும் இயக்கப்படும் இத்தகைய பிரீமியம் பேருந்துகள் தற்போது சென்னையிலும் இயக்கப்படுகின்றன. எந்த ரூட்டில் இயக்கப்படுகிறது, எவ்வளவு கட்டணம், என்னென்ன வசதிகள் உள்ளன என்பனவற்றை இங்கு காணலாம்.

சென்னையில் பயணிகளின் வசதியை மேம்படுத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காற்று மாசுவையும் கருத்தில் கொண்டு தற்போது எலக்ட்ரிக் பேருந்துகள் நகரின் பல்வேறு ரூட்களில் இயக்கப்பட்டு வருகிறது.

Chennai MTC Launches Modern Premium Bus Service Similar to London and Singapore

ஆம்னி பஸ்களை மிஞ்சும் வகையில்

அதேபோல ஏசி பேருந்துகளையும் சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் பொது போக்குவரத்தை மேலும் நவீனமாகவும் வசதிமிக்கதாகவும் மாற்றும் விதமாக புதிய பிரிமியம் ஏசி பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது. வெளியூர்களுக்கு செல்லக்கூடிய தனியார் ஆம்னி பேருந்துகளை மிஞ்சும் வகையிலும் புதிய பிரிமியம் பேருந்து சேவை அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள் உள்ளன?

தங்க ரதம் என்று சொல்லும் அளவிற்கு கோல்டன் கலரில் இந்தபேருந்துகளின் வெளிப்புற தோற்றம் உள்ளன. இந்த பேருந்து முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது ஆகும். பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமரா, சொகுசு இருக்கைகள், யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட்கள், இலவச வைஃபை, அவசரகால பொத்தான்கள், மற்றும் டிஜிட்டல் வழித்தட போர்டுகள், பிஐஎஸ் போர்ட்ஸ் போன்ற நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் மாற்றுத்திறனாளி பயணிகள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீல் சேர் பயணிகளுக்கான முன்பதிவு வசதியும் உள்ளது. இந்த பேருந்தில் கண்டக்டர்கள் இருக்க மாட்டார்கள். அப்படி என்றால் டிக்கெட் எப்படி எடுப்பது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். சென்னை ஒன் செயலி வழியாக முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்துவிட்டு இந்த பேருந்தில் பயணிக்கலாம்.

எந்த ரூட்டில் இயக்கம், கட்டணம் என்ன?

முதல் கட்டமாக இந்த பேருந்து சேவை வழித்தடம் 570S மற்றும் 91 ஆகிய இரண்டு ரூட்களில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளன. 570 எஸ் வழித்தடம் சென்னை கோயம்பேடு முதல் சிறுசேரி ஐடி பார்க் வரையிலும் 91 வழித்தடம் திருவான்மியூர் முதல் தாம்பரம் வரையிலும் இயக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள ஓம்ஆர் வழியே இந்த இரண்டு வழித்தடமும் உள்ளது.

சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்படும் இந்த பேருந்துகள் படிப்படியாக பல்வேறு வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். அதிகபட்ச கட்டணமாக ரூ.150 கட்டணம் ஆகும்.

சிங்கப்பூர், லண்டன், மும்பைக்கு பிறகு

நவீன இருக்கைகளுடன் பதுகாப்பான பயண அனுபவத்தை புதிய முயற்சியாக இந்த பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநரக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னை ஒன் செயலியில் பயணிகளின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு அவர்கள் கூறிய கருத்துகள் அடிப்படையில் இந்த பிரிமியம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களிலும் இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களிலும் இத்தகைய பிரீமியம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் இதேபோன்ற பேருந்துகளை பார்த்து பிரமித்த சென்னை பயணிகள் இந்த பேருந்தில் பயணிக்க கூடிய அனுபவத்தை மாநகர போக்குவரத்து கழகம் கண்முன்னே கொண்டு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+