"கமிஷன், கரெப்ஷன்!" கண்கள் சிவந்த ஸ்டாலின்! 4 சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இடைநீக்கம்?
சென்னை: அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களில் 3 பேர் திமுக கவுன்சிலர்கள், ஒருவர் அதிமுக கவுன்சிலர் ஆவார்.
சென்னை என்றில்லை எந்த மாநகராட்சியாக இருந்தாலும் நகராட்சியாக இருந்தாலும் பஞ்சாயத்தாக இருந்தாலும் முக்கிய பிரச்சினையாக கருதப்படுவது தண்ணீர் விநியோகம்தான். அதிலும் சென்னை போன்ற நகரங்களில் மெட்ரோ குடிநீர் விநியோகம் என்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு கேன் ரூ 40 வரை விற்பனை செய்யப்படுவதால் மெட்ரோ வாட்டர் மூலம்தான் பலர் குடித்தும் சமையலுக்கு பயன்படுத்தியும் வருகிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ வாட்டருக்காக பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு அவை இன்னும் மூடப்படாமல் உள்ளது.
சேறும் சகதியும்: காரணம்! இன்னும் மெட்ரோ தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படாததால் அவை இன்னும் மூடப்படவில்லை. இன்னும் இரு மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அப்போது இது போன்ற பள்ளங்களால் சாலைகளில் சேறும் சகதியுமாக மாறி உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் சில இடங்களில் மெட்ரோவுக்காக தோண்டி போட்ட பள்ளங்களால் கழிவுநீர் கால்வாய் செல்லும் பைப்புகளில் ஓட்டை ஏற்பட்டு அவை மெட்ரோ வாட்டருடன் கலக்கும் அவலங்களும் நடந்து வருகின்றன. இது போதாகுறைக்கு கவுன்சிலர்கள் ராஜ்ஜியம்தான் வார்டுக்கு வார்டு நடக்கிறது. அதிலும் பெண் கவுன்சிலர்களின் கணவர், தந்தை, சகோதரர்கள் செய்யும் அட்டூழியம் இருக்கிறதே அப்பப்பா!
பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்: எந்த பணிகளிலும் பெண் கவுன்சிலர்களின் உறவினர்களின் தலையீடுகள் இருக்கவே கூடாது என சென்னை மேயர் பிரியா ஒருமுறை எச்சரிக்கையாகவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மெட்ரோ குடிநீர் பணிகளை தடுத்து நிறுத்தியது, கட்டுமான பணிகளின் போது லஞ்சம் பெறுவது, தேவையில்லாத பணிகளை மேற்கொள்ள எஸ்டிமேட் போட சொல்லி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது, சாலை பணிகளுக்கான ஒப்பந்தத்தாரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியது என பல்வேறு புகார்கள் சில கவுன்சிலர்கள் மீது உள்ளன.
4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ்: அந்த வகையில் சோழிங்கநல்லூரை சேர்ந்த இரு கவுன்சிலர்கள், பெருங்குடி, மாதவரத்தை சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர் என 4 பேரிடமும் மேற்கண்ட புகார்களின் பேரில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இது போன்று பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படும் புகார்கள் வந்த நிலையில் உங்கள் 4 பேரையும் ஏன் சஸ்பெண்ட் செய்யக் கூடாது என கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடிநீர் இணைப்பு: இவ்வாறு அவர்கள் அனுப்பும் விளக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவர் என தெரிகிறது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு மெட்ரோ குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கால்வாய் பணிகள், சாலை பணிகள் என அனைத்தையும் கவுன்சிலர்களும் எம்எல்ஏக்களும் முடித்திருக்க வேண்டும். இதில் ஏதாவது நிறுத்தப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
2026 சட்டசபை தேர்தல் டார்கெட்: லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வென்றது. எதிர்க்கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதே போன்றதொரு வெற்றியை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் திமுக கூட்டணிக்கு கொடுக்க வேண்டும் என்றால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என முதல்வர் நம்புகிறார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications