சென்னையில்.. இரவில் இயங்கிய "பப்.." ஆண்கள், பெண்கள் கொண்டாட்டம்.. மீடியா கேமராக்களால் பெண்கள் கோபம்
சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு பாரில் அனுமதியை மீறி விடிய விடிய பார்ட்டி நடந்த நிலையில் அங்கு போலீஸார் திடீர் ரெய்டு சென்றதால் அவர்களை பார்த்ததும் மது போதையில் அரைகுறை ஆடையில் இருந்த ஆண்களும், பெண்களும் வெளியேறினர்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் pub எனப்படும் கேளிக்கை விடுதிகள் உள்ளன. இங்கு மதுபானம், உணவு பரிமாறப்படும். ஆண்கள் , பெண்கள் என இங்கு மதுகுடித்துவிட்டு அங்கு இசைக்கும் பாடல்களுக்கு நடனமாடிவிட்டு செல்வார்கள்.

பொதுவாக இந்த இடம் நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் இடமாகும். இந்த பப்புகள் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு சில ஆண்களும் பெண்களும் ஜோடியாக வந்து நிதானம் தெரியாத அளவுக்கு குடித்துவிட்டு அரைகுறை ஆடைகளில் நடனமாடுவார்கள்
இந்த நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு பப்பில் விடிய விடிய அதிக சப்தத்துடன் மது விருந்து நடந்து வந்தது. அந்த பக்கமாக எதேச்சையாக வந்த சைதாப்பேட்டை போலீஸார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அப்போது அவர்கள் அந்த பாரில் உள்ள மேனேஜரிடம்" நள்ளிரவு 1 மணிக்கு மேல் எப்படி பாரை நடத்தலாம். உடனே மூடுங்கள்" என்றனர்.
ஆனால் மேனேஜரோ பாரை மூடாமல் இருந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்களை வெளியே செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அவர்களும் அதை கண்டுக் கொள்ளாமல் குடித்து கும்மாளமடித்துக் கொண்டிருந்தனர். இதனால் வெளியே சென்ற போலீஸார் இன்னும் சில போலீஸாரை அழைத்து வந்தனர்.
உடனே அந்த பப்பை நிர்வாகிகள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு ஆட்டம் காண்பித்தனர். இதையடுத்து ஒரு வழியாக கதவை திறந்து போலீஸார் உள்ளே சென்ற போது மது போதையில் ஆண்களும் அவர்களுடன் பெண்களும் ஆடி கொண்டிருந்தனர். போலீஸார் அவர்களை வெளியேற்றினர். எனவே அவர்கள் அவசரமாக ஓடி வந்தபோது வெளியே இருந்த சில தமிழ் டிவி சேனல்கள் அதை வீடியோ எடுத்தன. இதனால் அந்த பெண்கள் கோபமடைந்தனர். சிலர் முகத்தை மூடினர்.
சில பெண்கள் துணியையும், சில பெண்கள் முடியையும் வைத்து முகத்தை மறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அது போல் கையில் இருந்த கைக்குட்டை , ஷால் உள்ளிட்டவை கொண்டு முகத்தை மூடி கொண்டனர்.
இன்னும் சில பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஓவர்கோட்டை எடுத்து மறைத்தனர். டிஸ்யூ பேப்பர் கொண்டும் மூடிச் சென்றனர். சிலர் தங்கள் ஆண் நண்பரை கட்டி பிடித்தபடியே முகத்தை காட்டாமல் சென்றனர். ஒரு பெண் தலையில் ஹெல்மெட் அணிந்த படியே கேமராமேனிடம் வாக்குவாதம் செய்தார். அவரை ஆண் நண்பர் சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.
வேறு பெண் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் முகத்தை மூடி கொண்டு வாக்குவாதம் செய்தார். என்னை போட்டோ எடுத்தால் தற்கொலை கேஸ் கொடுப்பேன் என அதிரடியாக மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications