Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை நேப்பியர் முதல் மாமல்லபுரம் வரை.. மொத்தமாக இப்படி மாறப்போகுதா? மீனவர்கள் அச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் வரை கடலையும், கடற்கரையையும் சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை முதல் மாமல்லபுரம் வரை உள்ள பகுதிகளுக்கு அதிகப்படியான பொதுமக்கள் சுற்றலாவாக வருகிறார்கள். இதில் மாமல்லபுரம், கோவளம், பெசன்ட் நகர், மெரினா கடற்கரை ஆகியவை சுற்றுலா தளங்களாக உள்ளன. இந்நிலையில் நேப்பியர் முதல் மாமல்லபுரம் வரை சுற்றுலா தளமாக மாறினால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள்.

Chennai Napier Bridge to Mamallapuram beach should not be turned into a tourist destination: Fisherman

தமிழ்நாடு புதுவை மீனவர் சமுதாயப் பாதுகாப்பு கமிட்டியினர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மீனவ மக்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

கடற்கரை மண்டல மேலாண்மை திட்டக் குழு வரைபடத்தில் நீக்கப்பட்டுள்ள தமிழக மீனவக் கிராமங்கள், மீன்பிடிப் பகுதிகள், மீனவர்களின் நீண்டகால வாழ்விடங்கள் ஆகியவற்றை சேர்க்கும் வரை, கருத்து கேட்புக் கூட்டம் நடத்தக் கூடாது.

ஆறு, ஏரி, குளம், குட்டை மற்றும் அணைகளில் மீன்பிடிக்கும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, அதன் மீன்பிடி உரிமைகளை உள்ளூர் மீனவருக்கே வழங்க வேண்டும்.

சென்னை நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் வரை கடலையும், கடற்கரையையும் சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும்.

எண்ணூர் பகுதியில் அனல்மின் நிலையத்தால் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் பகுதி மீனவமக்களுக்கு, அனல்மின் நிலையம் மற்றும் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

மயிலை நொச்சிக்குப்பம் மீனவ மக்களின் பயன்பாட்டு நிலத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பங்குத் தொகையை ரூ.1.50 லட்சமாக நிர்ணயித்து, உடனடியாக நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு குடியிருப்புகளை வழங்க வேண்டும்" இவ்வாறு அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+