Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்களே உஷார்.. பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றிய பணமோசடி.. யார் இந்த பீட்டர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தி நகர் நகைக்கடை உரிமையாளர், கல்லூரி மாணவியின் தாய் உள்பட பலரையும் ஏமாற்றி நூதன முறையில் ஏமாற்றி பல லட்சம் ரூபாயை மோசடி செய்த பீட்டர் என்பரை நீலாங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி பெயர் உமா (வயது 48). இந்த தம்பதிக்கு அமிர்தா என்ற மகள் உள்ளார். இவர் BASLP என்ற படிப்பை முடித்தார்.

chennai-neelankarai-police-arrested-peter-who-connection-with-multiple-cheating-case

அதன்பிறகு தனியார் மருத்துவ கல்லூரியில் M.sc Speech Language Pathology என்ற மேல்படிப்புக்கு விண்ணப்பம் செய்தார். நுழைவு தேர்வுக்கு தயாரானார்.

அப்போது உமாவின் குடும்ப நண்பர்களான கண்ணன் வழியாக அவரது நண்பர் பீட்டர் அமிர்தாவுக்கு தனியார் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினர். மேலும் ரூ.10 லட்சம் தந்தால் கல்லூரியில் சீட் உறுதி செய்யலாம் என்று கூறினார்.

இதையடுத்து உமா 2 தவணைகளாக முதலில் ரூ.4 லட்சம், அதன்பிறகு ரூ.6 லட்சம் என்று மொத்தம் ரூ.10 லட்சத்தை வங்கி கணக்கிற்கு மாற்றினார். கடந்த 2025 மே மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் இந்த பணம் பீட்டரின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது. பிறகு ஜூன் 26ல் அமிர்தா நுழைவு தேர்வு எழுதி 61.67 மதிப்பெண் பெற்றார். ஆனால் கவுன்சிலிங்கிற்கு அவர் அழைக்கப்படவில்லை.

பீட்டரிடம் கேட்டபோது 2வது கட்ட கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வரும் என்று கூறினார். பிறகு ஜூலை 31ம் தேதி ரூ.1.65 லட்சம் கேட்டதால் மீண்டும் வழங்கினார். ஆனால் கல்லூரியில் இருந்து M.sc Audiology படிப்புக்கான கவுன்சிலிங்கிற்கு அழைப்பு சென்றது. ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதனால் மீண்டும் பீட்டரிடம் கேட்டனர். அதற்கு அவர் 2 நாட்கள் காத்திருக்கும்படி கூறியுள்ளார்.

பிறகும் கூட M.sc Speech Language Pathology படிப்புக்கான கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வரவில்லை. பீட்டரிடம் பேசினார்கள். அதற்கு அவர் நீங்கள் கொடுத்த பணத்துக்கு M.sc Audiology கவுன்சிலிங் வந்துள்ளது. அதில் சேர்ந்து படிக்கும்படி கூறிவிட்டு மீண்டும் பேசுவதை தவிர்த்தார். கண்ணனிடம் பேசும்படி கூறி போனை துண்டித்தார்.

இப்படியாக உமா, பீட்டரிடம் ரூ.11.65 லட்சத்தை கொடுத்து ஏமாந்தார். இதுதொடர்பாக உமா சார்பில் நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பீட்டரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதான பீட்டர், உமா மட்டுமின்றி பலரையும் ஏமாற்றி உள்ளார்.

பீட்டரின் முழு பெயர் பீட்டர் ்அறிவரசன் என்பது தெரியவந்தது. அதோடு அவர் பொதுமக்களை ஏமாற்றி பல லட்சங்களை மோசடி செய்திருப்பதும் அம்பலமானது. அதன்படி சென்னை தி நகரில் நகைக்கடை வைத்திருக்கும் சந்தோஷ் ஜார்ஜ் என்வபவரிடம் தங்க நகை வாங்கி கொண்டு காசோலையை பயன்படுத்தி மோசடி செய்துள்ளார். அதேபோல் டாக்டர் சரணவன் என்பவரிடம் வங்கியில் ஏலம் விடப்படும் தங்க நகைகளை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி ரூ.43லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+