மழையால் மிதக்கும் தென் மாவட்டங்கள்.. நெல்லை வந்தே பாரத் உள்பட சில ரயில்கள் ரத்து.. விவரம் இதோ
சென்னை: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை -நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
வட மாவட்டங்களை பதம் பார்த்த வடகிழக்கு பருவமழை தற்போது தென் மாவட்டங்களை சூறையாடி வருகிறது. அங்குள்ள அருவிகள், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள குளங்கள் ஏற்கனவே நிரம்பியிருந்த நிலையில் தற்போது பெய்த தொடர் மழையால், குளங்கள் நிரம்பி வழிந்து வயல்களுக்குள் தண்ணீர் சென்றுள்ளது.

இதனால் பல ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் நெல்லை மாவட்டத்தின் பாபநாசம், சேரன்மாதேவி, விகேபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் 24 மணி நேரத்தை தாண்டி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு நிமிடம் கூட நிற்காமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகள் என எங்கும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஒரு சில இடங்களில் குடியிருப்புக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதுவரை கண்டிராத மழையால் நெல்லை நகர மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேபோல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர பகுதியில் வசித்து வருபவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்சாரம் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நெல்லை சென்னை வந்தே பாரத் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லை - ஜாம் நகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications