திமுகவை தொடர்ந்து போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. களமிறங்கிய சென்னை நியூ காலேஜ்.. போலீஸ் குவிப்பு!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர்.
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். முதல்முறையாக சென்னை நியூ காலேஜ் மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முதல்நாள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் நேற்று இந்த மசோதா சட்டமானது. இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். முக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் திமுக நடத்திய போராட்டம் பெரிய வைரலாகி உள்ளது. திமுகவினர் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் திமுக போராட்டத்தை தொடர்ந்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். முதல்முறையாக சென்னை நியூ காலேஜ் மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். 1000க்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கும் தமிழக அதிமுக அரசுக்கும் எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள். இதனால் தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளார். கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்ட பின்பும் கூட அங்கு போலீசார் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா?












Click it and Unblock the Notifications