நுங்கம்பாக்கம் ஷாக்! மயக்க ஊசி போட்டு 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எஸ்.ஐ மீது போக்சோ வழக்கு
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் ராஜி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு தாய் இல்லை என்றும் தந்தை, பாட்டியின் பராமரிப்பு வளர்ந்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுமி திடீரென காணாமல் போனார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அப்பகுதி முழுவதும் தேடினர். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. சிறுமியின் தோழியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசித்துவரும் காவல் உதவி ஆய்வாளர் ராஜி என்பவர் வீட்டில் சிறுமி இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்துப் பதறியடித்துக்கொண்டு அங்கு சென்று தேடியபோது, சிறுமி மயக்க நிலையில் இருந்தார். மயக்கம் தெளிந்ததும், என்ன நடந்தது என அவரிடம் கேட்டனர். அப்போது அந்தச் சிறுமி, "உதவி ஆய்வாளர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்" எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரில், "எங்கள் மகளுக்கு மயக்க ஊசி செலுத்தி உதவி ஆய்வாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், அந்தப் புகாரை நுங்கம்பாக்கம் போலீஸார் வாங்க மறுத்துவிட்டனர். எனவே, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வெளியே நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், அந்தச் சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாருக்குள்ளான உதவி ஆய்வாளர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது அந்த உதவி காவல் ஆய்வாளர், "சிறுமிக்குப் பெற்றோர் தொடர்ந்து துன்புறுத்துவதால், குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் தெரிவித்துவிடுவேன் என நான் கூறினேன். அதனால் என்னைப் பழிவாங்க இதுபோல் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, காவல் உதவி ஆய்வாளர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
-
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது!












Click it and Unblock the Notifications