Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்வாதியை.. கன்னத்தில் அறைந்த ஆண் நண்பர்? ராம்குமாரின் நீளும் "மரண முடிச்சுகள்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்வாதி கொலை, ராம்குமார் மரணம் தொடர்பான சந்தேகங்களும், கேள்விகளும் நாட்டின் மனசாட்சியை உலுக்கி எடுத்து கொண்டேயிருக்கிறது...!!

Chennai Nungambakkam Swathi murder and Are these the doubts that arise in the death of Ramkumar

சென்னையில் நடந்த ஸ்வாதி கொலையையும், ராம்குமாரின் மரணத்தையும், தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக கடந்து போய்விட முடியாது.. கடந்த 2016ம் ஆண்டு, ஜுன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 6.35 மணிக்கு, வேலைக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கொலையால், தமிழகமே உறைந்து போனது.

ஸ்வாதி: ஸ்வாதியை கொன்றது ராம்குமார்தான் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.. இதையடுத்து, கைதாகி ஜெயிலிலிருந்த ராம்குமார், மின்சார வயரைக் கடித்து, தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பிலேயே சொல்லப்பட்டது.. ஸ்வாதி கொலை வழக்கு, இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதே போலீஸ் தரப்பிலேயே அறிவிக்கப்பட்டது. ஆனால், ஸ்வாதி கொலையில் "சந்தேக முடிச்சு" அந்த நிமிடம்தான் இறுக்கமாக விழ ஆரம்பித்தது.

தன்னுடைய மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று ராம்குமாரின் அப்பா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்... "ஸ்வாதி கொலையில் ஆரம்பத்திலிருந்தே மர்மங்கள் உள்ளன, யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்" என்று சமூக ஆர்வலர்களும் கண்டனங்களுடன் கொதித்தனர்.

ராம்குமார்: அப்போதுதான், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. ராம்குமாரின் மூளை, இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் திசுக்களை ஹிஸ்டோபேத்தாலஜி நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, ராம்குமார் மின்சாரம் தாக்கிதான் இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்ற போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், இந்த வழக்கில், திருப்புமுனையாக நின்றது.

அதாவது, ராம்குமாரின் கழுத்தில் வலது பக்கத்தில் ஆழமாக அறுக்கப்பட்ட வெட்டுக் காயம் ஒன்றும், இடது பக்கம் லேசாக அறுக்கப்பட்ட வெட்டுக்காயமும் இருப்பதாக மருத்துவமனை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

Chennai Nungambakkam Swathi murder and Are these the doubts that arise in the death of Ramkumar

இப்படிப்பட்ட சூழலில், கடந்த வருடம், ஆங்கில பத்திரிகையான கேரவனில், ஸ்வாதி கொலை வழக்கு குறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.. "புளு மர்டர்" என்று தலைப்பிட்ட அந்த செய்திக் கட்டுரையில், விசிக திருமாவளவனின் பேட்டி ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அந்த பேட்டியில் திருமா ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.

சந்தேகம்: அதாவது, "வலது கை பழக்கமுள்ள ஒருவர், தன்னுடைய கழுத்தை வலது பக்கம் அறுத்துக்கொள்வது என்பது மிக மிக அரிதாக நடக்கும் ஒன்று.. வலது கை பழக்கமுடையவர்கள், தங்கள் கழுத்தையும், குரல்வளையும் அறுக்கும்போது, இடமிருந்து வலமாக அறுப்பதற்கான வாய்ப்புதான் உண்டு. காவல்துறையினர்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்திருக்க வேண்டும்" என்று தன்னுடைய சந்தேகத்தை பதிவு செய்திருந்தார் திருமாவளவன்.

திருமா அன்று எழுப்பிய சந்தேகத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.. மாறாக, ராம்குமார், சுவாதி மரணங்களில் வேறு சில புதிய சந்தேகங்கள் மட்டுமே கிளம்பி கொண்டிருக்கின்றன.

போஸ்ட் மார்ட்டம்: ராம்குமார் போஸ்ட் மார்ட்டத்தில், "மின்சாரம் பாயும் வயரினை ராம்குமார் கடித்திருந்தால், அவரது உதடுகளில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும்.. அப்படி காயங்கள் எதுவும் இல்லையே? மின்சாரம் உடலில் பாய்ந்திருந்தால், உடலின் மற்ற திசுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், ராம்குமாரின் உடலின் மூளை திசு, இதய திசுக்கள், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் எல்லாமே நல்ல நிலையில் இருக்கிறது" என்று ரிப்போர்ட் கூறுகிறது.

ஒருவர் கைதாகி, 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத பட்சத்தில், அவர் ஜாமீன் பெறுவதற்கான தகுதியை பெறுவார்.. அந்தவகையில், ராம்குமார் கைதாகி சரியாக 87-வது நாளில், வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக அறிவிப்பு வெளியானது எப்படி? அவர் இறக்கும்வரையில் குற்றப்பத்திரிகை தாக்கல செய்யப்படவில்லையே? குற்றப்பத்திரிகையில் கூட, ராம்குமார் கொலை செய்ததை பார்த்தேன் என உறுதிப்பட யாருமே சொல்லவில்லையே?" என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்கள் ராம்குமார் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள்.

ஸ்வாதி: ஸ்வாதி வழக்கை நடத்திவரும் வழக்கறிஞர் ராம்ராஜ் சொல்கிறார், "ஸ்வாதி பணியாற்றிய இடத்தில் இருக்கும் ஒருவருக்கு, ஹவாலா பணப் பரிமாற்றம் செய்யும் நபர்களுடன் தொடர்பு இருந்துள்ளது.. அவர்கள் ஸ்வாதியை பயன்படுத்தி சில பண பரிமாற்றங்கள் செய்திருக்கிறார்கள். அதுதொடர்பாக ஸ்வாதியிடம் முக்கிய ஆவணங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால், அவரை கொன்றிருக்கலாம்

அதேபோல, ஸ்வாதிக்கு ஒரு இஸ்லாமிய ஆண் நண்பர் இருக்கிறார். அவருடனும் சுவாதிக்கு அவ்வப்போது சண்டை ஏற்படுவதுண்டு. இந்த ஆண் நண்பருக்கு அவரது குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த ஆண் நண்பர் பற்றி யாரும் பேசவே இல்லையே ஏன்? " என்றும் சந்தேகங்களை எழுப்புகிறார் ராம்ராஜ்.

சிவப்பு நிறம்: "சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, நல்ல சிவப்பு நிறத்தில் ஒரு ஆண், சுவாதியை அடிப்பதை பார்த்தோம். ஆனால், சுவாதி அவரை தடுக்கவும் இல்லை, சண்டையிடவும் இல்லை" என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஸ்வாதியை அடித்த நபரும், கொலை செய்த நபரும் ஒரே ஆள் இல்லை.. வேறு வேறு நபர்கள் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், மேற்கண்ட இந்த குற்றச்சாட்டையெல்லாம் போலீசார் மறுக்கிறார்கள்.. ஸ்வாதியின் ஆண் நண்பரிடம் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தியதாகவும், கொலை நடந்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும் சுவாதி கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகள் சொல்கிறார்கள்.

நம்பிக்கை: இப்படி, நாளுக்கு நாள் ஸ்வாதி, ராம்குமார் மரணம் தொடர்பான சந்தேகங்கள் பெருகியபடியே உள்ளன. அதற்காக, மொத்த சம்பவங்களையும் முழுமையாக ஆராயாமல், ஸ்வாதி கொலைக்கு இதுதான் காரணம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.. அதேபோல, ராம்குமார்தான் கொலை செய்தார் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது.

எனினும், இந்த வழக்கு விசாரணை தற்போது தொடர்ந்து நடந்துவரும் நிலையில், உண்மைகள் ஒருநாள் வெளிவந்தே தீரும் என்ற, அடர்ந்த நம்பிக்கை மட்டும் தமிழக மக்களுக்கு இன்னமும் குறையவேயில்லை..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+