சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்.. 1 ரூபாயில் மெட்ரோவில் பயணிக்கலாம்! ’சென்னை ஒன்’ செயலி மட்டும் போதும்
சென்னை: சென்னையில் மாநகர பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோவில் பயணிப்பவர்களுக்கு புதிய டிஜிட்டல் வசதியாக "சென்னை ஒன் (Chennai One)" செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய பயனர்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) சென்னை ஒன் செயலி மூலம் பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்க வெறும் ரூ.1க்கு டிக்கெட் பெறும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
பெருநகரமான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை நாடி வருகின்றனர். மாநகர் பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பொதுவாக தினசரி பயணிகள் பஸ், மெட்ரோ, ரயில் ஆகியவற்றுக்கு தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் "சென்னை ஒன்" செயலியை கடந்த சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.
சென்னை ஒன் செயலி
இந்த சென்னை ஒன் செயலி அறிமுகமானதிலிருந்து, இந்த மூன்று போக்குவரத்துகளுக்கும் ஒரே இடத்தில் திட்டமிடுவது, பணம் செலுத்துவது மற்றும் பயண மேலாண்மை என அனைத்தையும் ஒரே செயலியில் செய்ய முடிகிறது என்கின்றனர் பயணிகள். இந்நிலையில் இப்போது சென்னை ஒன் செயலி மூலம் வெறும் ரூ.1-க்கு டிக்கெட் வாங்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனை BHIM Payments App அல்லது Navi UPI வழியாக பணம் செலுத்தும் பயணிகள் மட்டுமே பெற முடியும்.
ரூ.1 டிக்கெட்
இந்த "One Rupee Ticket" சலுகை ஒரு குறுகிய காலத்திற்கே வழங்கப்படும். இதன் நோக்கம், டிஜிட்டல் மற்றும் பணமில்லா போக்குவரத்தை ஊக்குவிப்பது தான். உதாரணமாக விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயிலில் செல்ல, ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 'சென்னை ஒன்' செயலியை பயன்படுத்தி, பீம் மற்றும் நேவி செயலிகள் மூலமாக டிக்கெட் எடுத்தால், ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் சலுகையில் ஒருமுறை மட்டுமே டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும் என CUMTA தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சலுகை
"சென்னை ஒன்" செயலி அறிமுகமானது முதல், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வெறும் ஒரு மாதத்தில் 5.5 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்கள், 14 லட்சம் சர்ச்சுகள் , மற்றும் 8.1 லட்சம் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன. எளிமையான வடிவமைப்பு, QR குறியீட்டின் மூலம் பல்வேறு போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைத்தல், மற்றும் நேரடி கண்காணிப்பு வசதிகள் காரணமாக இதனை டவுன்லோடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பீம் யூபிஐ
ரூ.1 டிக்கெட் பெறுவதற்கு, உங்கள் மொபைல் போனில், "Chennai One" செயலியை ஓபன் செய்யவும் அல்லது Play Store/App Store-ல் இருந்து பதிவிறக்கவும். பயணிக்க விரும்பும் இடம் மற்றும் போக்குவரத்து முறையைத் தேர்ந்தெடுக்கவும். BHIM App அல்லது Navi UPI மூலம் ரூ.1 செலுத்தவும். உடனடியாக டிக்கெட் QR குறியீடு உருவாகும்; அதனை பயணத்தின் போது காட்டினால் போதும். இந்த சலுகை ஒருமுறை பயணத்திற்கே பொருந்தும், மற்ற சலுகைகளுடன் இணைக்க முடியாது. முதல் பயணத்திற்குப் பிறகு, வழக்கமான கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். இந்த சிறப்பு சலுகை இன்று (நவம்பர் 13, 2025 - வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications