செல்லமே.. முளைச்சு மூணு இலை விடல.. அதுக்குள்ள ஷைலஜா மேல காதல்! சென்னை ஓரகடத்தில் யாரிந்த குட்டி பையன்?
சென்னை: வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள்தான் சினிமாவில் வருகிறதா? அல்லது சினிமாவில் காட்டப்படுவதைதான், வாழ்க்கையில் நடந்து கொள்கிறார்களா? தெரியவில்லை.. அப்படியொரு சம்பவம்தான், சென்னையில் நடந்துள்ளது.. 17 வயது சிறுவன், இப்போதே காதல், கல்யாணம், கடத்தல் , அடிதடி என ஆரம்பித்து, ஜெயில் வரை சென்றிருக்கிறான்.. என்ன நடந்தது சென்னையில்?
சென்னை தாம்பரம் அருகே இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்த 17 வயது சிறுவன், பெண்ணின் வருங்கால கணவரை கடத்தி பீர் பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி.. இவர் தாம்பரம் அடுத்த ஒரகடத்தில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சைலஜா என்ற பெண் அறிமுகமானார்.. அவருடன் நட்புடன் பழகி வந்த நிலையில், நாளடைவில் இருவருமே காதலிக்க துவங்கிவிட்டனர். பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து, அவரவர் வீட்டில் சம்மதம் பெற்றனர்.. இதையடுத்து, விரைவில் திருமணமும் நடக்க ஏற்பாடானது
இந்நிலையில் கடந்த வாரம் , கருப்பசாமியும், சைலஜாவும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை எடுத்தனர்.. அதனை தங்களது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்திருந்தனர்..
பக்கத்து வீட்டு சிறுவன்
இந்த வீடியோவை, ஷைலஜாவின் வீட்டு பக்கத்தில் வசித்து வரும் 17 வயது சிறுவன் பார்த்துள்ளான்.. இந்த சிறுவனுக்கு, ஷைலஜா மீது கொள்ளை ஆசை.
நீண்ட காலமாகவே, சைலஜாவை ஒருதலையாக காதலித்து வருகிறாராம் இந்த சிறுவன்... அதுமட்டுமல்ல, தன்னுடைய காதலை ஷைலஜாவிடமும் பலமுறை சொல்லியிருக்கிறாராம்.. ஆனால், ஆரம்பத்தில் சிறுவன் விளையாட்டுக்கு சொல்வதாக ஷைலஜா நினைத்துள்ளார்.. பிறகுதான் சீரியஸாகவே சிறுவன் சொல்வதை அறிந்து ஷைலஜா அதிர்ந்துள்ளார்..
பிறகு சிறுவனுக்கு புத்திமதியும் சொல்லியுள்ளார். 3 வயது வயதில் சிறியவன் என்பதை சொல்லி, சிறுவனின் காதலையும் ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும், ஷைலஜா மீது வெறித்தனமான காதலை சிறுவன் வைத்திருந்தான்.
ஆவேசம் - கோபம்
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ஷைலஜாவும், கருப்பசாமியும் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோவை சிறுவன் பார்த்துவிட்டு, ஆவேசமாகியிருக்கிறார்.. உடனே ஷைலஜாவுக்கு போனை போட்டு கோபத்தில் சத்தம் போட்டுள்ளார்..
இது ஷைலஜாவுக்கு எரிச்சலை தந்தது.. சிறுவனின் போனை துண்டித்துவிட்டு, கருப்பசாமியிடம் சிறுவனை பற்றி சொல்லி உள்ளார்.
உடனே கருப்பசாமி, சிறுவனுக்கு போன் செய்து, "நாங்கள் காதலிக்கிறோம் , திருமணம் செய்து கொள்ள போகிறோம், இனி தொந்தரவு செய்யாதே" என்று கூறியிருக்கிறார்.. அதற்கு சிறுவன், நீங்கள் நேரில் வாங்க, நாம பேசலாம் என்று சொல்லி அழைத்துள்ளார்.
நேரில் வாங்க பேசலாம்
உடனே கருப்பசாமியும், சிறுவனை சந்திக்க கடந்த ஞாயிறன்று, அந்த பகுதியிலுள்ள டீக்கடைக்கு வந்துள்ளர்.. அப்போது ஆட்டோவில், 6 பேருடன் ஆவேசமாக வந்த சிறுவன் பீர் பாட்டிலால் கருப்பசாமியின் தலையிலேயே அடித்து நொறுக்கியிருக்கிறான்.. அத்துடன், கருப்பசாமியை ஆட்டோவில் வைத்து, யாருமில்லாத காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்..
ஷைலஜாவை நான் தான் கல்யாணம் செய்ய போகிறேன், குறுக்கே நீ ஏன் வந்தே? என்று சொல்லி, சொல்லியே, கருப்பசாமியை, சிறுவன் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.. 6 பேரும் சேர்ந்து தாக்கியதில், கருப்பசாமி, அங்கேயே நிலைகுலைந்து சுருண்டு விழுந்துள்ளார்.. இதைப்பார்த்த 6 பேருமே உடனே அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
காட்டுப்பகுதி
பிறகு காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த சிலர், உயிருக்கு போராடி கொண்டிருந்த கருப்பசாமியை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் விரைந்து வந்து, கருப்பசாமியை மீட்டு, அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது.. தற்போதும் கருப்பசாமி சிகிச்சையில்தான் உள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹரி, உஸ்மான், விஜய் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரையும் கைது செய்தனர். இதில் 5 பேரை ஜெயிலுக்கும், 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications