மணிக்கு 600 கிமீ வேகம்.. 30 நிமிடத்தில் பெங்களூர் போகலாம்! சென்னை புறநகரில் வரும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வெளிவட்ட சாலையில் ஹைப்பர் லூப் திட்டத்தைச் சோதிக்கச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் சென்னை ஐஐடிக்கு பரிந்துரைத்துள்ளது.. இந்த ஹைப்பர் லூப்பில் நாம் மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்ல முடியும். உதாரணத்திற்குச் சென்னையில் இருந்து கிட்டததட்ட அரை மணி நேரத்தில் பெங்களூர் சென்றடையலாம்

இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று சென்னை.. ஐடி, தொழிற்சாலை எனப் பல துறைகளில் சென்னை தலைசிறந்து இருக்கிறது. அதேநேரம் சென்னையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

chennai offbeat


இப்போது சென்னையைச் சுற்றிலும் 62 கிமீ தொலைவுக்கு வெளிவட்டச் சாலை உள்ளது. இந்த வெளிவட்ட சாலையால் சென்னைக்குப் பல நன்மைகள் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் வேறு ஒரு சரித்திர திட்டத்திற்கும் இந்த வெளிவட்ட சாலை உதவியாக அமைய உள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஹைப்பர் லூப்: அதாவது நமது சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் போக்குவரத்தை விரைவானதாக மாற்ற ஹைப்பர் லூப் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ஹைப்பர் லூப் திட்டத்தைச் சோதனை செய்ய இந்த வெளிவட்ட சாலை மிகச் சிறந்த இடமாக இருக்கும் என்றும் இதற்கான சோதனை நடத்த அனுமதியைப் பெறத் தமிழக அரசை அணுகுமாறு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் ஐஐடி சென்னைக்குப் பரிந்துரைத்துள்ளது..

டிக் அடிக்கப்பட்ட 4 பகுதிகள்! சென்னையில் இந்த ஏரியாவுக்கு ஜாக்பாட்! ஊரே வியக்கும் மாஸ்டர் பிளான்


இருப்பினும், இந்த ஹைப்பர் லூப் திட்டத்திற்கு அனுமதி கோரி சென்னை ஐஐடி இன்னும் மாநில அரசை அணுகவில்லை என்றே தெரிகிறது. மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லும் ஹூப்பர் லூப் திட்டத்தைச் சோதிக்க இந்த அவுட்டர் ரிங் சாலை மிகக் கச்சிதமானதாக இருக்கும் என்றே வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மணிக்கு 600 கிமீ வேகம் என்றால் சென்னையில் இருந்து கிட்டததட்ட அரை மணி நேரத்தில் பெங்களூர் சென்றடையலாம்.

சென்னை ஐஐடி: இந்தத் தொழில்நுட்பத்தை தற்போது சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் உருவாக்கி வருகிறார்கள். விரைவில் அதை தையூரில் உள்ள ஐஐடி வளாகத்தில் 100 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை செய்ய உள்ளனர். முதற்கட்ட சோதனைக்கு இது சரியாக இருக்கும். ஆனால், அதன் பிறகு சோதனை பெரியளவில் இடம் தேவைப்படும். எதிர் காற்று உள்ளிட்ட zero air resistance சூழலில் அடுத்த கட்ட சோதனை செய்ய மிகப் பெரிய இடம் தேவைப்படுகிறதாம். அதற்கு அவுட்டர் ரிங் சாலை சரியானதாக இருக்கும் என்கிறார்களாம்.

சென்டரல் டூ தாம்பரம் வெறும் 14.. மிரண்டு நிற்கும் சென்னைவாசிகள்.. இது எப்படி சாத்தியம்


இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "சில மாதங்களுக்கு முன்பு தொழில்நுட்ப ரீதியாக இது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்பது குறித்து விளக்கினர். அடுத்த கட்டமாக நீண்ட தூரத்திற்குச் சோதனை செய்ய வேண்டும் என்றார்கள். அப்போது தான் ​​பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தில் ஹைப்பர் லூப் வழங்குவது குறித்து ஆலோசித்தும். பல ஐடியாக்களை வழங்கினோம்.

வெளிவட்ட சாலை: அப்போது தான் முழு வேகத்தில் அதாவது 600 கிமீ வேகத்தில் எங்குச் சோதனை செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்தோம். இதற்கு வெளிவட்ட சாலை சரியாக இருக்கும் என்று முடிவு செய்தோம். ஏனென்றால் வெளிவட்டச் சாலையில் 22 மீ அகலமுள்ள மீடியன் பேட்ச் உள்ளது. அதைப் பயன்படுத்த முடியுமா என்று கேட்டோம். இது குறித்து சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் இறுதி முடிவை எடுக்க முடியும்" என்றார்.

முதல்முறை இல்லை: அவுட்டர் ரிங் சாலை நடுவே உள்ள 22 மீ மீடியனை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்து அளிக்கப்படும் 2வது முன்மொழிவு இதுவாகும். முதலில் எண்ணூர் துறைமுகம் முதல் ஆவடி வரையிலான ரயில் இணைப்புகளை இதன் மூலம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிறகு இதை வண்டலூர் வரை நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. அதாவது அவுட்டர் ரிங் சாலையின் குறுக்கே உள்ள 22 மீட்டர் நிலத்தில் ரயில் பாதையை அமைக்கலாம் என்பதே பரிந்துரையாகும். இருப்பினும், சில காரணங்களால் அந்த பரிந்துரை கைவிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+