டிக் அடிக்கப்பட்ட 4 பகுதிகள்! சென்னையில் இந்த ஏரியாவுக்கு ஜாக்பாட்! ஊரே வியக்கும் மாஸ்டர் பிளான்
சென்னை: சென்னை இப்போது படுவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாகப் புறநகரில் பல பகுதிகளில் புது புது திட்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே சிஎம்டிஏ அதிகாரிகள் சென்னை அவுட்டர் ரிங் சாலையைச் சுற்றி மாஸ்டர் பிளானை போட்டுள்ளனர். இது சென்னையின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யும்.
சென்னை ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட ஒரு இடமாக மாறிவிட்ட நிலையில், இப்போது முக்கிய நிறுவனங்களின் ஃபோகஸ் சென்னை புறநகர் பக்கம் திரும்பி வருகிறது.

அவுட்டர் ரிங் சாலை: அதன்படி இப்போது சென்னை அவுட்டர் ரிங் சாலை அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகி வருகிறது. வரும் ஆண்டுகளில் பிரீமியம் வீடுகள், தொழில் நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ஆகியவற்றுடன் துடிப்பான ஒரு பொருளாதார காரிடராக அவுட்டர் சிங் சாலை மாறுகிறது. குறிப்பாக மீஞ்சூர், ரெட் ஹில்ஸ், பூந்தமல்லி மற்றும் வண்டலூர் ஆகிய பகுதிகளை அடையாளம் கண்டுள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், மூன்றாவது மாஸ்டர் பிளானில் அவற்றை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.
சென்னை புறநகரில் வடக்கே அமைந்துள்ள மீஞ்சூரையும் தெற்கே உள்ள வண்டலூரையும் இணைக்கும் 62 கி.மீ நீளமுள்ள அவுட்டர் ரிங் சாலை முதலாவது மாஸ்டர் பிளானிலும் இடம் பெற்று இருந்தது. இருப்பினும், அந்த பகுதிகள் இன்னுமே பெரியளவில் வளர்ச்சியடையாமல் இருக்கிறது.. ஆனால், இப்போது பாரந்தூர் விமான நிலையம், மீஞ்சூர் அருகே உள்ள துறைமுகம், மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி சிஎம்டிஏ புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறது. இந்த பகுதிகளில் பொருளாதார மண்டலத்தை விரிவுபடுத்த சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.
அதிகாரிகள் தகவல்: இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "10 பகுதிகளில் காலி இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த இடங்களைச் சுற்றி விரிவான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படும். குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வளர்ச்சி என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் சீரான வளர்ச்சி இருப்பதை உறுதி செய்யும் விதமாகத் திட்டத்தை அமைக்கிறோம்" என்றார்.
4 முக்கிய ஏரியா: இந்த மாஸ்டர் பிளானில் 4 முக்கிய முனையங்கள் இருக்கும். அதில் பூந்தமல்லி வணிக மாவட்டமாக இருக்கும். பெங்களூர் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்திருப்பது, விரைவில் அமையும் மெட்ரோ ஸ்டேஷன், புதிய நகரமாக உருவாகும் திருமழிசை அருகே உள்ளது ஆகியவை பூந்தமல்லியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
இதுதான் திட்டம்: வண்டலூர் பகுதியில் ஏற்கனவே அதிக ஐடி நிறுவனங்கள் உள்ள நிலையில், அப்பகுதியைச் சுற்றி இப்போது குடியிருப்பு திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் அது ஒரு காஸ்மோபாலிட்டன் மையமாக மாறும்.. மீஞ்சூரின் வளர்ச்சி என்பது துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். தொழிற்சாலைகள், கிடங்குகள் அது சார்ந்து வளர்ச்சி மிஞ்சூரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட் ஹில்ஸில் நகர்ப்புற பார்க் உள்ளிட்ட மரங்களைக் கொண்ட ஒரு பகுதியாக வளர்த்தெடுக்கப்படும். நீர் மேம்பாடு திட்டங்கள், வனப்பகுதி இங்கு டெவலப் செய்யப்பட்டு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக இது உருவாக்கப்படும்.
இது தொடர்பாக இந்தியப் பசுமைக் கட்டிடக் குழுவின் (சென்னை பிரிவு) தலைவரும் அஜித் சோர்டியா கூறுகையில், "சென்னை அவுட்டர் சிங் சாலையின் இரு புறமும் சுமார் 50 மீட்டர் கடைகள், வணிக வளாகங்களை அமைக்கலாம்.. அதேநேரம் சில இடங்கள் பார்க் போன்ற மக்கள் பயன்பாட்டு இடங்களுக்காக ஒதுக்கப்பட்டால் நன்றாக இருக்கும்" என்றார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications