சூப்பர்.. சென்னை மேம்பாலங்களில் இரவு நேர போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி.. ஏன் தெரியுமா?
சென்னை: சென்னையில் இருக்கும் மேம்பாலங்களை இரவு நேரத்தில் மோதும் பழக்கம் இருந்து வந்தது. தற்போது அந்த பழக்கம் நிறுத்தப்பட்டு மீண்டும் சென்னை மேம்பாலங்களில் இரவு நேர போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான பல மேம்பாலங்கள் உள்ளன. கோடம்பாக்கம் மேம்பாலம், ஜெமினி பாலம், நேப்பியர் பாலம், அடையாறு பாலம், வடபழனி பாலம், தி நகரில் உள்ள பாலம், அசோக் நகர் பாலம், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம் என்று ஏகப்பட்ட பாலங்கள் நகரப்பகுதியில், புறநகர் பகுதியிலும் உள்ளன.
பெங்களூர் அளவிற்கு சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க இந்த பாலங்கள் காரணம், முறையாக திட்டமிட்டு கட்டப்பட்ட பாலங்கள் காரணங்கள் போக்குவரத்து நெரிசல் சென்னையில் வெகுவாக குறைந்து உள்ளது.உதாரணமாக முன்பெல்லாம் வடபழனி சிக்னலில் பல மணி நேரம் நிற்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

ஆனால் அங்கே பாலம் கட்டப்பட்ட பின் இந்த சிக்கல் இல்லை. மக்கள் எளிதாக பாலத்தில் பயணம் செய்ய முடிகிறது.ஆனால் இந்த பாலங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்தாலும் சென்னையில் இருக்கும் மேம்பாலங்களை இரவு நேரத்தில் மோதும் பழக்கம் உள்ளது. இதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக போலீசார் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காரணங்கள்: 1. இரவு நேரங்களில் மேம்பாலங்களில் காரை நிறுத்திவிட்டு சிலர் தூங்கும் வழக்கம் உள்ளது. இதை தடுக்கவே இந்த ஏற்பாடு.
2. இரவு நேரங்களில் சில காதல் ஜோடிகள் உல்லாசமாக இருக்க மேம்பாலங்களை பயன்படுத்துகின்றனர். 3. இரவு நேரங்களில் மேம்பாலங்களில் குற்றச்செயல்களை கண்காணிப்பது கடினம்.
4. மேம்பாலங்களில் இருந்து இரவு நேரங்களில் மக்கள் யாராவது தற்கொலை செய்ய சென்றால் தடுப்பது கடினம். 5. வீடு இல்லாதவர்கள் இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மேல் உறங்குவதை தடுக்க ஏற்பாடு.
6. சில இளைஞர்கள் மேம்பாலங்களில் ஸ்டாண்ட் செய்யும் வழக்கம் இருந்தது. இதை தடுக்கவும் இந்த ஏற்பாடு. 7. அண்ணலையில் இருக்கும் ஜெமினி பாலம் உட்பட சில பாலங்கள் அருகே முக்கியமான சில இடங்கள் உள்ளன. உதாரணமாக ஜெமினி பாலம் அருகே அமெரிக்க துணை தூதரகம் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கே பாலங்கள் இரவில் மூடப்படுகின்றன. 8. ஒரு காலத்தில் பாலத்தில் உடல்களை தொங்கவிடும் குற்றச்செயல்கள் நடந்து வந்தன. அவை தற்போது தடுக்கப்பட்டு உள்ளன.
மீண்டும் திறப்பு: சென்னையில் பாலங்களை அதிகாலையில் திறந்துவிடுவார்கள். 4 மணிக்கு பிறகும் வரிசையாக ஒவ்வொரு பாலமாக பேரிகேட் நீக்கப்பட்டு திறக்கப்படும் வழக்கம் உள்ளது. தற்போது பாலங்களை மூடும் பழக்கம் நிறுத்தப்பட்டு மீண்டும் சென்னை மேம்பாலங்களில் இரவு நேர போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இரவு நேரங்களில் அலுவலகங்களை விட்டு வீடு திரும்புவோர் நிறைய பேர் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மேம்பாலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இரவு நேரங்களில் 33 மேம்பாலங்கள் மூடப்பட்ட நிலையில் இனி அந்த பாலங்கள் மூடப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படி பாலங்களை மூடுவதில் ஏற்கனவே சில விதி விலக்குகள் உள்ளன. பண்டிகை காலங்களில் இரவு நேரத்தில் பெரிய அளவில் போக்குவரத்து நேரில் ஏற்படும். உதாரணமாக தீபாவளி, பொங்கலுக்கு மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். அது போன்ற சமயங்களில் பாலங்களை திறந்து வைக்கும் வழக்கம் உண்டு. அதேபோல் முதல்வர் போன்ற பெரிய விவிஐபிக்கள் செல்கையில் சிக்கல் இன்றி செல்ல பாலங்கள் திறந்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் தற்போது எல்லோருக்கும் பாலங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
-
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
தவெக பதவியேற்று 15 நாளானால் என்ன? இப்போதைக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா அதிரடி! -
சென்னை மக்களுக்கு ஷாக் செய்தி..‘இந்த’ ஏரியாக்களில் கரண்ட் வராது! மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்! உஷார் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது கனமழை.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட்












Click it and Unblock the Notifications