Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாடி பாலத்தை கடந்து போறீங்களா? இனி நோ டென்ஷன் குட் நியூஸ் சொன்ன மாநில நெடுஞ்சாலை துறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரட்டூர் மற்றும் வில்லிவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள் வட்டச் சாலையில் அமைந்துள்ள பாடி மேம்பாலத்தின் கீழ் இரண்டு 'U' வடிவ சர்வீஸ் சாலைகள் அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை ரூ.14 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் கொரட்டூர் மற்றும் வில்லிவாக்கம் மக்கள் பெரிய அளவில் பயனடைவார்கள்.

பாடி மேம்பாலம் மற்றும் பாடி மேம்பாலத்திற்கு இடையே 1.1 கி.மீ தூரத்திற்கு உள் வட்டச் சாலையின் இருபுறமும் இரண்டு பாதைகள் சேர்க்கப்படும். இது தொடர்பான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

Tamil Nadu CMDA

நெடுஞ்சாலைத் துறையின் மெட்ரோ பிரிவின் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், "அனைத்து பணிகளும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், வட கொரட்டூர் குடியிருப்பாளர்கள் திருமலை சதுக்கம் சாலை வழியாக பாடி மேம்பாலத்திற்குச் செல்ல முடியும். மேலும், நெரிசலான பள்ளா தெரு சந்திப்பில் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

தற்போது, பீக் ஹவர்ஸில் பாடி மற்றும் ரெட்டேரி மேம்பாலங்கள் செல்லும் திசையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சர்வீஸ் சாலைகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, பள்ளா தெருவைப் பயன்படுத்தும் வட கொரட்டூர் வாகன ஓட்டிகள் திருமலை சதுக்கம் சாலை வழியாக பாடி மேம்பாலத்தை அடையலாம்" என்று தெரிவித்திருக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பணிகள் முடிந்த பிறகு போக்குவரத்து நெரிசல் மதிப்பீடு செய்யப்பட்டு, உள் வட்டச் சாலையில் வட கொரட்டூர் சிக்னலை மூட போக்குவரத்து காவல்துறை பரிசீலிக்கும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரட்டூர் போக வேண்டும் எனில், பாடி மேம்பாலத்தை கடந்து, ஒரு ரயில்வே மேம்பாலம் வரும். அதை தாண்டி சிக்னலில் இடதுபுறம் எடுத்தால் போக முடியும்.

ஆனால், காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சிக்னலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை சரிசெய்ய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ரூ.139 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், பாடி மேம்பாலம் வரை இருபுறமும் 1.1 கி.மீ அணுகு சாலையும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இப்பணி கடந்த ஆண்டு துவங்கியது.

ஜவஹர்லால் நேரு சாலை (உள் வட்ட சாலை) முதலில் ஐந்து வழிப்பாதைகளைக் கொண்டிருந்தது, ஆனால் மேம்பாலத்தில் மூன்று வழிப்பாதையாகவும், மேம்பாலத்தின் அருகே இரண்டு வழிப்பாதையாகவும் குறுகியது. தற்போதுள்ள 27 மீட்டர் அகலத்திலிருந்து 53 மீட்டராக பாலம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த பணி முழுவதும் மாநில நெடுஞ்சாலை நிலத்தில் மேற்கொள்ளப்படுவதால் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டம் வட கொரட்டூர் மற்றும் பாடி குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான அணுகலை வழங்குவதோடு, போக்குவரத்து நெரிசலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பாடி மேம்பாலத்தில் இருந்து கொளத்தூர் செல்லும் கால்வாய் ஓர நிலத்தில் பெரிய குழிகள் மற்றும் அதிகமான தாவரங்கள் உள்ளன. முறையான சர்வீஸ் சாலைகள் இல்லாததால், பாடியில் உள்ள குழாய் தயாரிப்பு நிறுவனம் உட்பட அருகிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் தொழிலாளர்கள், பரபரப்பான சாலையில் நடந்து சென்று தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். இனி இந்த பிரச்சனை இருக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+