சென்னை பல்லாவரம் அருகே கத்திமுனையில் வியாபாரி கடத்தல்... மாமூல் தர மறுத்ததால் அடித்து சித்ரவதை
சென்னை : சென்னை பல்லாவரம் அருகே, மாமூல் கொடுக்க மறுத்த வியாபாரியின் மகனை கத்தி முனையில் கடத்திய கும்பல், அவர் அணிந்திருந்த நகையை பறித்ததோடு, இரவு முழுவதும் தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர், பஜார் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன் யோகேஸ்வரன் என்பவரும் மளிகை கடையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, இரண்டு நபர்கள், சசிகுமாரின் கடைக்கு சென்று, இனி தங்களுக்கு மாமூல் வழங்க வேண்டும் எனக் கூறி, பணம் கேட்டுள்ளனர். அதற்கு சசிகுமார் பணம் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சசிகுமாரின் மகன் யோகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
வழக்கம் போல் மளிகை கடையை மூடிவிட்டு இரவு 10:30 மணிஅளவில் வீட்டுக்கு செல்வதாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஆறு பேர் கொண்ட கும்பல், திடீரென யோகேஸ்வரனை வழிமறித்து, கத்தி முனையில் கடத்திச் சென்றது. அவரை பொழிச்சலூரில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு அழைதுச் சென்ற அந்தக் கும்பல், அவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர், இரவு முழுவதும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும், யோகேஸ்வரன் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி, ஒரு சவரன் மோதிரம் மற்றும் விலை உயர்ந்த செல்ஃபோன் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர். அவரை தொடர்ந்து இரவு முழுவதும் அடித்து சித்ரவதையும் செய்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அந்த கும்பல், கஞ்சா போதையில் தூங்கி விட்டதால், அந்த வீட்டில் இருந்து யோகேஸ்வரன் தப்பி சென்றார். பலத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்த அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார், உடனடியாக108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு யோகேஸ்வரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, யோகேஸ்வரனை கடத்திச் சென்ற அந்த பாழடைந்த வீட்டுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். எனினும், அங்கு யாரும் இல்லாததால், கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாமுல் கேட்டு பணம் தர மறுத்த மளிகைக் கடைக்காரரின் மகனை, கத்தி முனையில் கடத்திச் சென்று, நகையை பறித்ததோடு, இரவு முழுவதும் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications