சென்னை பல்லாவரம் பெண்ணுக்கு என்னாச்சு? லாரி டிரைவருக்கு தலையே சுத்திருச்சு.. தவிக்கும் 2 குழந்தைகள்
சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் நம்முடைய நாட்டில் பெருகி வருகின்றன. உலகமறியா பிஞ்சு குழந்தைகளையே, பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொன்றுவிடுகிறார்கள். மற்றொருபுறம் தாலி கட்டிய கணவனையும் சாப்பாட்டில் விஷம் வைத்து சில மனைவிகள் கொன்றுவிடுகிறார்கள். அந்தவகையில் கள்ளக்காதலுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், கள்ளக்காதலியையே போட்டுத்தள்ளிவிட்டார் ஒருவர்.. நம்ம சென்ன்னையில்தான்..!!
சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசித்தன்.. இவருக்கு 40 வயதாகிறது.. தாம்பரம் மாநகராட்சியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. இன்னும் திருமணம் ஆகவில்லை.. தனியாக ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்.

தனிமையில் வசித்து வரும் பெண்
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் ஞானசித்தனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.. பாக்கியலட்சுமிக்கு 33 வயதாகிறது.. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.. ஆனால் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார் பாக்கியலட்சுமி.. இதனால், 2 பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். ஞானசித்தன் - பாக்கியலட்சுமி இருவருமே அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
தனக்கும் 40 வயதாகிவிட்டதால், பாக்கியலட்சுமிக்கும் துணை யாரும் இல்லாததால், பாக்கியலட்சுமியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார் ஞானசித்தன்.. ஆனால், பாக்கியலட்சுமிக்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. இந்த விஷயம் தெரிந்ததுமே கொந்தளித்து போய்விட்டார் ஞானசித்தன். உயிருக்கு உயிராக நேசித்து, திருமணமும் செய்ய நினைத்தபோது, இன்னொருவருடன் உறவா? என்று அதிர்ச்சி அடைந்தார்.
நிலைகுலைந்த பாக்கியலட்சுமி
இந்நிலையில், நேற்றிரவு பாக்கியலட்சுமி வீட்டுக்கு ஞானசித்தன் சென்றுள்ளார்.. அப்போது பாக்கியலட்சுமியுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.. அப்போது பாக்கியலட்சுமிக்கு போன் வந்துள்ளது.. போனில் நீண்ட நேரம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாராம் பாக்கியலட்சுமி..
இதை கவனித்த ஞானசித்தன், போனில் யார் என்று கேட்டுள்ளார்.. என்னுடைய பாய்பிரண்டு என்றாராம் பாக்கியலட்சுமி.. அப்படியானால் நான் யாரு என்று கேட்டுள்ளார் ஞானசித்தன்..

அதற்கு பாக்கியலட்சுமி "நான் யாரிடம் உறவு வைத்தால் உனக்கென்ன?" என்று கேட்டுள்ளார்.இதனால், இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஞானசித்தன், கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து பாக்கியலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து சுருண்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
பயந்துபோன ஞானசித்தன்
பாக்கியலட்சுமியின் சடலத்தை பார்த்து பயந்துபோன ஞானசித்தன், நேராக சங்கர்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நடந்த சம்பவத்தை சொல்லி சரணடைந்தார். இதைக்கேட்டு திடுக்கிட்ட போலீசார் அவரை கைது செய்ததுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாக்கியலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் விவகாரத்தில் பாக்கியலட்சுமியை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனம் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தலைநகரில் ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி பட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவருடன்தான் நீண்ட நேரம் பேசினாராம்.. அவர் யார் என்று தெரியவில்லை.. இப்போது தந்தை, தாயை இழந்து, பாக்கியலட்சுமியின் 2 குழந்தைகளும் கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றன.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications