சென்னையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்.. பரபப்பு காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராணி என்பவர் முறைகேடு செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ராணி என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொதுமக்களிடம் பணம் அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்தது.

chennai Pallikaranai Traffic inspector has been dismissed for misconduct

அத்துடன் விபத்து இழப்பீடு வழக்குகளை தனக்கு தெரிந்த வக்கீல்கள் மூலமாக இழப்பீடு தொகைகளில் கமிஷன் பெற்றதாகவும் புகார்கள் காவல் துறை உயர் அதிகாரிளுக்கு வந்தது.

தொடர் புகார்களை அடுத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரைணக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜேம்ஸ் தங்கையா விசாரணை நடத்தினார். அதில் பெண் இன்ஸ்பெக்டர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மை என்பவது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் இன்ஸ்பெக்டர் ராணியை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இந்த நிலையில் தாம்பரம் ஆணையரக கூடுதல் கமிஷனர் காமினி கடந்த 7 மாதங்களாக நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் ராணி முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாக தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டர் ராணியை பணி நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+