ஸ்ட்ரிக்ட் உத்தரவு.. உங்க கிட்ட கார், பைக் இருக்கா.. அப்போ உடனடியாக இதை படிங்க.. வந்தது புது ரூல்!
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில், நடைமேடைகளில் கார், பைக்குகள் பார்க் செய்யப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சென்னையில் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும். ஆனால் தற்போது சென்னையில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க வெள்ள நீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்கள் தற்போது பலன் அளிக்க தொடங்கி உள்ளன.

சாலை ஓரங்களில் பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர் .முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தற்போது நடந்து வரும் கடைசி கட்ட பணிகள் இந்த மழைக்காலத்திற்கு முன்பாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சாலையில் தோண்டப்பட்டு உள்ள குழிகள் விரைவில் மூடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னையில் முக்கிய சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சென்னையில் முக்கிய சாலைகள் பல்வேறு மாற்றங்களை பெற உள்ளன. சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்.
சென்னையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கத்தீட்ரல் சாலை ஆகிய சாலைகளில் இந்த மாற்றங்கள் செய்யப்படும். அதன்பின் எலியடஸ் கடற்கரை சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளிலும் இந்த மாற்றம் செய்யப்படும். இப்படி மொத்தம் 18 சாலைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் பார்க்கிங் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கிரேட்டர் சென்னை மாநகராட்சி தனது வணிக வளாகங்களில் 10 மாடி மல்டி லெவல் பார்க்கிங் பகுதிகளை பல்வேறு இடங்களை உருவாக்க உள்ளனர். ஆர்.ஏ.புரம் 3வது குறுக்குத் தெரு, சி.பி.ராமசாமி சாலை, தியாகராய சாலை, கோடம்பாக்கத்தில் உள்ள என்.எஸ்.கே.சாலை ஆகிய இடங்களில் முதற்கட்டமாக ₹162 கோடியில் அமைக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக மீதமுள்ள இடங்களில் பார்க்கிங் அமைப்பது தொடர்பான திட்டத்திற்கு மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஜோன்ஸ் லாங் லாசால் பிராபர்ட்டி ஆலோசகர்கள் மற்றும் CBRE சவுத் ஏசியா பிரைவேட் லிமிடெட் உடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. நிலம், சாலை இணைப்பு, போக்குவரத்து மற்றும் பொருளாதார செலவு பற்றிய விரிவான அறிக்கைக்காக இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இப்படி பார்க்கிங் பகுதிகளை தவிர்த்து சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில், நடைமேடைகளில் கார், பைக்குகள் பார்க் செய்யப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . நீண்ட நாட்களாக பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
முதல் கட்டமாக 600 இடங்களில் நான்கு சக்கர வாகன பார்க்கிங் உருவாக்கப்படும். அதே வேளையில், விரிவாக்கத்திற்குப் பிறகு 2,000 க்கும் மேற்பட்ட இடங்கள் பார்க்கிங் செய்வதற்காக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தி நகரில் முன்பு 40 கோடியில் கட்டப்பட்ட மல்டி லெவல் பார்க்கிங் ஸ்லாட்டில் 222 கார் ஸ்லாட்டுகள் இருந்தன, ஆனால் விரைவில் செயலிழந்தன. அது போல இல்லாமல் இந்த முறை தொடர்ந்து இயங்க கூடிய பார்க்கிங்குகள் அமைக்கப்படும் , என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications