Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் சென்னைக்கு வந்த ஜோலார்பேட்டை தண்ணீர்.. மக்கள் மகிழ்ச்சி.. நாளை முதல் விநியோகம்!

ரயில் மூலம் குடிநீர் வந்துள்ளதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீர் இன்று சென்னை வந்து சேர்ந்தது. அதை சுத்திகரித்து, விநியோகிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சென்னைவாசிகள் ஏகப்பட்ட சந்தோஷத்தில் உள்ளனர்.

சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ப்பதற்காக ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்து அதற்காக ரூ.65 கோடி நிதியும் ஒதுக்கி 3 கட்டமாக அதிகாரிகள் அங்கும் ஆய்வும் அங்கு நடத்தினர்.

இதற்காக சோதனை ஓட்டமும் நடந்தது. ஆனால் அப்போது சின்ன சின்ன கோளாறுகளும் ஏற்படவே செய்தன. அவை உடனடியாக சரி செய்யப்பட்டு, மீண்டும் சோதனை ஓட்டம் அது வெற்றிகரமாக முடிந்தது.

கட்டணம்

கட்டணம்

ஜோலார்பேட்டையிலிருந்து வில்லிவாக்கம் செல்ல ஒரு லிட்டருக்கு 34 பைசா வீதமும், ஒரு நடைக்கு 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வீதமும், 30 நாள்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல 7 கோடியே 74 லட்சம் ரூபாயை தென்னக ரயில்வேக்கு தமிழக அரசு கட்டணமாக செலுத்தும். நேற்று இரவே ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் சென்னை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சிக்கல் காரணமாக தாமதம் ஏற்பட்டது.

தீவிரம்

தீவிரம்

எனவே, சென்னைக்கு ரயிலில் முதல் நீர் இன்று மதியம் வந்து சேர்ந்தது. ஆனால் இதை அப்படியே எடுத்து பொதுமக்களுக்கு தந்துவிட முடியாது என்பதால் சுத்திகரிக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன்படி நாள் ஒன்றுக்கு 4 முறை இந்த குடிநீர் ரயில் மூலம் எடுத்து வரப்படும் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டது.

2 மணி நேரம்

2 மணி நேரம்

ஆனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வர கால அவகாசம் 6 மணி நேரம் ஆகிறது. அத்துடன் குடிநீரை வேகன்களில் ஏற்ற எப்படியும் 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் ஒரு நாளைக்கு 3 முறைதான் குடிநீர் சென்னைக்கு கொண்டு வரப்படும் சூழல் உருவாகி உள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவிக்கிறார்கள்

75 லட்சம் லிட்டர்

75 லட்சம் லிட்டர்

அப்படி 3 முறை வந்தால், மொத்தம் 75 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது ஒரு முறை ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றி கொண்டு வரலாம். அப்படித்தான் இன்று வில்லிவாக்கத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. தமிழக அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் வரவேற்று இதனை திறந்து வைத்தனர்.

சுத்திகரிப்பு

சுத்திகரிப்பு

ஆனால் இதை உடனடியாக மக்களுக்கு வழங்க முடியாது. இதற்காக வில்லிவாக்கம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் வரை 3 கிலோ மீட்டருக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் மூலம்தான் கொண்டு வரும் நீர் சென்றடையும். அதன்பிறகு சுத்திகரிப்பு பணி நடக்கும். சுத்திகரிப்பு பணிக்கு 3 மணி நேரம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

மக்கள் மகிழ்ச்சி

மக்கள் மகிழ்ச்சி

ஒவ்வொரு முறையும் சுத்திகரிப்பு பணி முடிந்தபிறகுதான், லாரிகள் மூலம் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. "எப்படியோ.. பலநாள் எதிர்பார்த்து காத்து கிடந்த தண்ணீர் சென்னை வந்து சேர்ந்துவிட்டது... இதுவே எங்களுக்கு பெரிய சந்தோஷம்" என்கிறார்கள் சென்னைவாசிகள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+