சென்னை மக்களே.. மார்ச் 31க்குள் இந்த 6 விஷயத்தை முடித்து விடுங்க.. இல்லாவிட்டால் பெரும் சிக்கல்
சென்னை: 2024-25ம் நிதியாண்டு வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 2025-26 நிதியாண்டு பிறக்க உள்ளது. இதனால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளது. இப்படியான சூழலில் தான் சென்னையில் வசிக்கும் மக்கள் மார்ச் 31ம் தேதிக்குள் 6 முக்கிய விஷயங்களை முடித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் உள்பட பிற சிக்கல்களில் சிக்க நேரிடும்.
புதிய நிதியாண்டு என்பது ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிவடையும். அந்த வகையில் இப்போது 2024-25 நிதியாண்டு நடந்து வருகிறது. இந்த நிதியாண்டு என்பது மார்ச் 31ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. அதன்பிறகு புதிய நிதியாண்டான 2025-26 ஏப்ரல் 1ம் தேதி பிறக்க உள்ளது.

ஒவ்வொரு புதிய நிதியாண்டிலும் கூட வங்கிகள், ஏடிஎம், பணப்பரிமாற்றம் செயலிகள் உள்பட பல்வேறு பொருளாதாரம் சார்ந்த திட்டங்களில் மாற்றம் என்பது மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் பல திட்டங்களில் மாற்றம் என்பது அமலுக்கு வர உள்ளது. இப்படியான சூழலில் தான் சென்னையில் வசிக்கும் மக்கள் மார்ச் 31ம் தேதிக்குள் 6 முக்கிய விஷயங்களை முடித்துவிட வேண்டும்.
முதல் விஷயம்
அதில் முதல் விஷயம் என்னவென்றால் சொத்து வரி பாக்கியை செலுத்துதல். சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த சொத்து வரியை மார்ச் 31ம் தேதிக்குள் மக்கள் செலுத்த வேண்டும். காலதாமதமின்றி இந்த வரியை செலுத்தும் பட்சத்தி்ல அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும்.
2வது விஷயம்
சென்னையில் தொழில் செய்து வரும் நபர்கள் தொழில்முறை சார்ந்த வரி பதிவை (Professional Tax Registration) புதுப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி தொழில் வரியை செலுத்தி பாக்கி இன்றி பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
3வது விஷயம்
2024-25 நிதி ஆண்டு முடிவதற்கு முன்பாக வீடு, கடை, தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு கட்டண முறையை சரி பார்த்து கொள்ள வேண்டும். ஏதாவது பெண்டிங் பில் இருப்பின் உடனடியாக செலுத்த வேண்டும். இதன்மூலம் மின்சேவை துண்டிக்கப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும்.
4வது விஷயம்
சென்னை குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் பெண்டிங் பில் உள்ளதா என்பதை சரி செய்து கொள்ள வேண்டும். பாக்கி இருப்பின் அதனை உடனடியாக செலுத்த வேண்டும். இதன்மூலம் தாமத கட்டணத்தை தவிர்ப்பதோடு, தொடர்ச்சியான குடிநீர் சேவையை இடையூறு இன்றி பெற முடியும்.
5வது விஷயம்
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி பில்லிங்கை சரிபார்க்க வேண்டும். தொழில் செய்வார் ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் பைல் செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் சரக்கு மற்றும் சேவை வரியை மார்ச் 31ம் தேதிக்கு முன்பாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.இதன்மூலம் அபராதத்தை தவிர்க்க முடியும்.
6வது விஷயம்
இதில் கடைசி விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு அரசின் சேமிப்பு திட்டங்கள். தமிழ்நாடு அரசு சார்பில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் வைப்புத்தொகை (Fixed Deposits) திட்டங்கள் உள்ளன. இதில் வட்டி நன்றாக தரப்படும். அதோடு வரி விலக்கு உண்டு. இதனால் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தயாராகலாம்.
-
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
தமிழ்நாட்டின் கஜானா காலியா? நிதி நிலை என்ன? இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்!












Click it and Unblock the Notifications