Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளிக்கு கூட இவ்வளவு கூட்டம் வெளிய போகலையே.. தாம்பரம் முதல் திண்டிவனம் வரை.. அவ்வளவு டிராபிக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சாரை சாரையாக மக்கள் சொந்த வாகனங்களிலும், பேருந்துகளிலும் பயணிக்கிறார்கள். கடந்த தீபாவளி பண்டிகையை விடவும் இந்த முறை அதிகமான மக்கள் செல்வதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக செங்கல்பட்டு தாண்டி திண்டிவனம் வரை வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் சென்னையில் இருந்து கிளம்பி உள்ளனர். கடந்த வியாழக்கிழமை முதல் அதிக அளவு மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

chennai people pongal travel : The traffic congestion is high to Tindivanam beyond Chengalpattu

வெள்ளிக்கிழமையான நேற்று இரவு ஒட்டுமொத்தமாக சென்னை நகரம் முழுவதும் ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கிளம்பி சென்றனர். இதனால் சென்னை நகரத்தை தாண்டி, பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வரை வாகன நெருக்கம் நேற்று அதிகமாக இருந்தது.

பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக நேற்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் 1260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், மொத்தம் 3,946 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இது அரசு பேருந்துகள் கணக்கு மட்டும் தான். தனியார் ஆம்னி பேருந்துகளில் கண்டிப்பாக இதில் பாதி அளவு பயணிகள் பயணித்திருக்க வாய்ப்பு உள்ளது.

சுமார் ஒரு லட்சம் பேர் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றிருப்பார்கள் என தெரிகிறது. இன்று தான் மொத்தமாக சென்னையில் இருந்து கிளம்புவார்கள் என்பதால் கண்டிப்பாக சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பேருந்துகளிலும், பல ஆயிரம் பேர் சொந்த வாகனங்களிலும் செல்வார்கள் என தெரிகிறது.

அதை நிரூபிக்கும் வகையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலையில் இன்று காலை முதலே வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. வழக்கமாக பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு வரைதான் போக்குவரத்து நெரிசல் காணப்படும் . ஆனால் இந்த முறை தாம்பரம் முதல் திண்டிவனம் வரை போக்குவரத்து நெரிசல் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறார்கள். தாம்பரம் பகுதியில் கடும் நெரிசல் காணப்படுகிறது.

chennai people pongal travel : The traffic congestion is high to Tindivanam beyond Chengalpattu

சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோர், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறதா இல்லை என்பதை கூகுள் மேப்பில் அறிய முடியும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் அந்த பகுதியில் சிவப்பு வண்ணத்தில் காட்டும். அதன்மூலம் மாற்று வழிகளை பார்த்தோ அல்லது நெரிசலுக்கு ஏற்பவோ பயண திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.

இதனிடையே இன்று தான் சென்னையில் மிக அதிகமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் இன்று அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர் .. நாளையும் கணிசமாக மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் இன்றும் நாளையும் போக்குவரத்து நெரிசல் திருச்சி சாலையிலும், சுங்கச்சாவடிகளிலும் அதிகமாகவே இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+