இன்று வெற்றிகரமான 100-வது நாள்.. பெட்ரோல், டீசல் விலையில் நோ சேஞ்ச்!
சென்னை: தமிழகத்தில் 100-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமுமே இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 க்கும் என விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. இதற்கு நாட்டில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு உள்ளது. இதன் உச்சமாக கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ100ஐ தாண்டி விற்பனையானது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதன் பின்னர் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ஒரு பகுதியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2 முறை குறைத்தது. தமிழக அரசும் பெட்ரோல் விலையை ரூ3 குறைத்தது.
பின்னர் கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ9; டீசல் விலையில் ரூ7.50 என குறைத்தது மத்திய பாஜக அரசு. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் குறைத்தன. இதனால் பெட்ரோல், டீசல் விலை சற்றே குறைந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை. இது பெரிய சர்ச்சையாகவும் வெடித்தது.
நாடாளுமன்றத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கடுமையாக விவாதம் நடந்தது. தமிழக எம்.பி.க்களும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே இது தொடர்பாக தமிழில் காரசார விவாதம் நடைபெற்றது. இதேபோல் தமிழக அரசு மீது பாஜக இது தொடர்பாக புகார் தெரிவிக்கிறது. இதற்கு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பதிலடியும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் இன்று100-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ102 .63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24ஆக விற்பனையாகிறது. ஆனாலும் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications