பிஎஃப்பில் முதல் முறை சேர்ந்தால் 150000.. பிரதமரின் திட்டம்.. சென்னை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டம் (PMVBRY) நாடு முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கவும், முறைப்படுத்தப்பட்ட துறைகளில் சமூகப் பாதுகாப்பை அதிகரிக்கவும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்படி, பிஎஃப்பில் முதல் முறையாக உறுப்பினராகும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோல் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து பயிலரங்கம் வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னையில் நடக்கிறது.
பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டம் (PMVBRY) என்பது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத் திட்டமாகும். இந்த திட்டம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கவும், முறைப்படுத்தப்பட்ட துறைகளில் சமூகப் பாதுகாப்பை அதிகரிக்கவும் தொடங்கப்பட்டிருக்கிறது. பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டத்தின் படி, ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027க்குள் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை நாட்டில் உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் இரண்டு விதமான திட்டங்கள் உள்ளன. அதில் திட்டம் ஒன்றில், முதல் முறை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதாவது முறைசார்ந்த தொழில் நிறுவனங்களில் (பிஎஃப்பில் ஊழியருக்கு கணக்கு உருவாக்கி பதிவு செய்யப்பட வேண்டும்) புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு நேரடி நிதி உதவி மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
மாதச் சம்பளம் ₹1 லட்சம் வரை பெறுபவர்கள் இந்த ஊக்கத்தொகை தகுதியானவர்கள் ஆவார். ஒரு ஊழியரின் ஒரு மாத ஊதியத்திற்குச் சமமான ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் அதிகபட்ச வரம்பு ₹15,000 என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் தொகை இரண்டு தவணைகளில், ஆதார் அடிப்படையில் ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும். முதல் தவணை, வேலைக்கு சேர்ந்த 6 மாதம் முடிந்த பின்னர் வழங்கப்படும். இரண்டாம் தவணை வேலைக்கு சேர்ந்து 12 மாதத்திற்கு பிறகு வழங்கப்படும்.
திட்டம் இரண்டில் வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது. புதிய வேலைகளை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக இந்த சலுகை வழங்கப்படுகிறது. புதிதாக ஊழியர்களைச் சேர்க்கும் நிறுவனங்களுக்கு (பிஎஃப்பில் பணியாளர்களை சேர்க்க வேண்டும்) வழங்கப்படும். ஒவ்வொரு கூடுதல் ஊழியருக்கும் (மாதச் சம்பளம் ₹1 லட்சம் வரை) மாதந்தோறும் ₹3,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஐடி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை விட உற்பத்தித் துறைதான் அதிக வேலைவாய்ப்பு தருகிறது. எனவே வேலைவாய்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த உதவிகைள செய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வடக்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான பயிலரங்கத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வழங்குபவர்களுக்காக வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நடத்துகிறது. பயிலரங்கத்துக்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர் தலைமை தாங்குவார்.
புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டத்தின் பயன்கள், அதில் சேருவதற்கான தகுதிகள் என்ன?, பதிவு செய்யும் நடைமுறை ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை பயிலரங்கம் நோக்கமாக கொண்டுள்ளது. இணையதளம் மூலமாக பதிவு செய்யும் நடைமுறைகள், வேலை வழங்கும் நிறுவனங்கள் அல்லது முதலாளிகள் கேட்கும் கேள்விகளுக்கு வைப்பு நிதி நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் செயல்விளக்கத்துடன் புரிய வைப்பார்கள்.
அனைத்து தொழில் நிறுவனங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிலரங்கத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக மேலும் விவரங்களை சென்னை வடக்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications