சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தில்" ஜெயமாலா.. போலீசுக்கே தண்ணி காட்டி.. நடுரோட்டில் நடந்த "சேசிங்".. 3 பேர் பிடிபட்டது எப்படி?

சென்னையில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: 3 பேரை சுட்டுக் கொன்ற ஜெயமாலாவை இன்னும் கைது செய்ய முடியவில்லையாம்.. அவரைதான் புனே மற்றும் தமிழக போலீசார் சேர்ந்து தேடி கொண்டு இருக்கிறார்கள்.. இதனிடையே இந்த கொலையில் தொடர்புடைய 3 பேரை கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.

இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. இப்போது கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்.

எத்தனை தடைகள் வந்தாலும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்துவோம்... எல்.முருகன் எத்தனை தடைகள் வந்தாலும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்துவோம்... எல்.முருகன்

 கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

ஜெயமாலா - ஷீத்தல் தம்பதிக்கு கல்யாணமாகி 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்... தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்ததால், டைவர்ஸ் கேட்டிருந்தார் ஜெயமாலா. இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார்.

மாமனார்

மாமனார்

எல்லா சொத்துக்களையும் 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுக்கவும்தான், இது தகராறாக உருவெடுத்தது. சம்பவத்தன்று, புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வீட்டிற்குள் நுழைந்த மருமகள் ஜெயமாலா, மாமனார், மாமியார், கணவனை சுட்டு தள்ளினார். ஒவ்வொருவரையும் 5 முறை துப்பாக்கியால் நிறுத்தி நிதானமாக சுட்டு கொன்றுள்ளார்.

 தகவல்

தகவல்

இந்நிலையில், இந்த கும்பலில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளது எப்படி என்ற பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது. முதலாவதாக, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைதான ஆராய்ந்துள்ளனர்.. அதில், அந்த வீட்டுக்கு வந்த காரின் ரிஜிஸ்டர் நம்பரை போலீஸார் கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போதுதான் ஜெயமாலா சிக்கினார். அதனால், கொலை செய்துவிட்டு, ஒரே நாளில் தமிழகத்தை விட்டு காரில் தப்பி இருக்க முடியாது என்பதால், சென்னை, செங்கல்பட்டு, புனே, சோலாப்பூர் ஆகிய இடங்களில் தேடியிருக்கிறார்கள்.

சேசிங்

சேசிங்

பிறகுதான் காரை கண்டுபிடித்து, பின்னாடியே துரத்தி சென்று அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.. ஆனால் புனேவில் அந்த காரை கண்டுபிடித்துவிட்டும், அந்த காரின் வேகத்துக்கு போலீசாரால் துரத்தி பிடிக்க முடியவில்லை.. சினிமாவில் வரும் சீன் போலவே புனே நடுரோட்டில் சேசிங் நடந்ததாம். இறுதியில் தனிப்படை போலீஸார், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அந்த காரை மடக்கினர்... ஆனால், காருக்குள் ஜெயமாலா இல்லை... ஜெயமாலாவின் அண்ணன், உறவினர்களான கைலாஷ் 32, ரவீந்தரநாத் கர் 25, விஜய் உத்தம் கமல் 28, ஆகிய 3 பேரும் இருந்துள்ளனர்.

துப்பாக்கி

துப்பாக்கி

அவர்களைதான் கைது செய்து, அந்த காரையும், அவர்களிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். சொத்தை அபகரிக்க முறைப்படி கோர்ட்டில் கேஸ் போட்டிருந்தாலும், போலீஸ் ஸ்டேஷனில் வரதட்சணை கொடுமை என்று ஜெயமாலா ஏற்கனவே புகார் ஒன்றை தந்துள்ளாராம்.. சம்பவத்தன்றுகூட சொத்து விஷயமாக ரொம்ப நேரமாக சண்டை போட்டுள்ளார்.. இறுதியில்தான் துப்பாக்கியில் சுட்டிருக்கிறார்.. அதுவும் குறி பார்த்துதான் சுட்டிருக்கிறார்.

 ஜெயமாலா

ஜெயமாலா

இப்போது ஜெயமாலா புனேவில் இருப்பதாக சொல்கிறார்கள்.. அதனால் அவரை கைது செய்ய, நம் போலீசாருக்கு புனே போலீசார் உதவி செய்து வருகின்றனர்.. கைதான ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ், ஜெயமாலா எங்கிருக்கிறார் என்ற தகவலை சொல்லி உள்ளாராம். அதனடிப்படையில்தான் அவரை தேடி வருகின்றனர்.. இன்று எப்படியும் ஜெயமாலா கைதாவார் என்று தெரிகிறது... ஜெயமாலாவிடம் விசாரித்தால்தான் சம்பவத்தன்று என்ன நடந்தது என்று மேலும் தெரியவரும்.

English summary
Chennai Police arrested 3 people and police searched for daughter in law
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X