தமிழ்நாட்டில் முதல் முறையாக.. சம்பவம் செய்த CM விஜய்.. அமைச்சரவையில் 20% பேர் பட்டியிலினத்தவர்கள்!
சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விஜய் தலைமையிலான அரசு அடுத்தடுத்து வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்து வருகிறது. முதல் விஷயம் தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி அமைச்சரவை உருவாகியுள்ளது. இரண்டாவது முக்கிய விஷயம் இந்த கூட்டணி அமைச்சரவையில் சமூக நீதி பிரதிநிதித்துவம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இன்று பதவியேற்கும் 23 அமைச்சர்கள் உடன் மொத்தம் 33 அமைச்சர்கள் கொண்ட தவெக கட்சி தலைமையிலான அமைச்சரவையில் 7 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது வரலாற்று நிகழ்வாகும். மொத்த அமைச்சரவையில் சுமார் 20 சதவீத பங்கீட்டை பட்டியலின அமைச்சர்கள் கொண்டுள்ளனர். இந்தியா சுந்திரம் அடைந்தில் தமிழ்நாட்டில் இவ்வளவு அதிகமான பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர்கள் கொண்டு இருந்தது இல்லை.

இந்த ஏழு பட்டியலின அமைச்சர்களில் ஆறு பேர் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இணைந்தால் மொத்த எண்ணிக்கை எட்டாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த பட்டியலின அமைச்சர்களின் மொத்த லிஸ்ட்:
சென்னை எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியைச் சேர்ந்த லோகேஷ், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த மதன்குமார், திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியைச் சேர்ந்த கமலி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியைச் சேர்ந்த காந்திராஜ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைச் சேர்ந்த தென்னரசு ஆகியோர் ஆவர்.
காங்கிரஸ் அமைச்சர்:
காங்கிரஸ் சார்பில் மதுரை மாவட்டம் மேலூர் பொதுத் தொகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இதில் மேலூர் பொதுத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் உள்ள 7 அமைச்சர்களும் ஒரு பகுதியை சேர்ந்தவர்களாக அல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 21ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் 7 பட்டியலின அமைச்சர்களுடந் மொத்த 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவை விரிவாக்கம் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட அமைச்சரவையாக உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும், குறிப்பாக பின்தங்கிய பகுதிகளுக்கும், சமுகத்தில் பல்வேறு வகையில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த 7 பேர் கொண்ட அமைச்சரவை முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று பதவியேற்கும் அமைச்சர்களுக்கு கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் பொறுப்பேற்க உள்ள நிலையில், துறை ஒதுக்கீடுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பட்டியலின சமூகத்தினருக்கு 20 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பது முதலமைச்சர் விஜய்யின் சமூக நீதி அரசியலை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த அமைச்சரவை தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
-
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications