விதிமீறி கட்டுமானம்.. இனி கட்டிடங்களுக்கு கரண்ட் கிடைக்காது! நேரம் பார்த்து ஆப்பு வைத்த தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள ஆய்வின்படி கிராம ஊராட்சிகளில் சொத்து வரி இரசீது மற்றும் நீலவரைபட அனுமதி இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில், கிராம ஊராட்சிகளில் விதிகளை மீறி கட்டுமானப் பணிகள் மேற்கொண்டாலும் சொத்து வரி கட்டிய பிறகு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று முன் வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளது. இந்த கிராம ஊராட்சிகளில் புதியதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் கடைகளுக்கு நிலவரைபட கட்டணம் மற்றும் சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

TNEB Tamil Nadu Government Building

இந்நிலையில், தமிழக அரசின் அரசாணையில் கிராம ஊராட்சிகளில் புதியதாக வீடு கட்டுபவர்கள் இணைய வழியில் சுய சான்று கட்டிடங்கள் கட்டிட அனுமதி மற்றும் மனைப்பிரிவு அனுமதி யாவும் ஒற்றை சாளர முறைப்படி உரிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளாட்சிகள் மூலம் தொகை நிர்ணயம் செய்து சுய சான்று அனுமதி வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரின் கடிதத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளது. மேலும் 2500 சதுர அடியிலிருந்து மனையில்,3000 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள குடியிருப்புக் கட்டுமானங்களைக் சுய சான்றின் பேரில் நீலவரைபட அனுமதி பெற்று கட்டிடங்கள் கட்டிக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. முறையான கட்டிட வரைபட அனுமதியும் பெறாமல் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களின் கட்டுமானத்தை நிறுத்த, நகர் மற்றும் ஊரமைப்பு திட்டமிடல் சட்டம் 1971 விதிகள் 56,57 மற்றும் 80 (A)-மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட மேம்பாட்டு விதிகள் 2019-யின்படி நடவடிக்கை மேற்கொள்ள கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

1. கிராம ஊராட்சிகளின் நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிமேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி சான்றினைகோரி அறிவிப்பானை வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாகக் கள ஆய்வு செய்ய வேண்டும். கள ஆய்வின் போது கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டுள்ளதா அல்லது கட்டுமான பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை ஆய்வு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மேலும் கட்டிடம் சொத்து வரி விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதா அல்லது விடுபட்டுள்ளதா என்பதைக் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. கட்டிடத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிவுநீர் வசதி ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

5. அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட கட்டிடம் தொடர்ந்து கட்டப்பட்டு கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அதிகாரம் கிராம ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு உனண்டு.அதை படிவம் 3-ல் சம்மந்தப்பட்ட நபருக்கு அறிவிப்பாக சார்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. கட்டிட வரைப்பட அனுமதி இன்றி கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களின் உரிமையாளருக்கு அளிக்கப்படும் அறிவிப்பானது உரிய அலுவலர்களால் நேரடியாக சம்மந்தப்பட்ட நபருக்கு சார்வு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. இவ்விரண்டு நபர்களும் இல்லை என்றால் தற்போது அந்த நபர் வசிக்கும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் ஒப்புகை அட்டையையும் இணைத்து அனுப்பி சார்பு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. உரிய அறிவிக்கையின்படி கட்டுமானப்பணிகள் நிறுத்தப்படவில்லை எனில், அக்கட்டிடத்தினை பூட்டி சீல் வைக்கவும் உரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சியின் நிர்வாக அலுவலர், ஊராட்சியின் ஆய்வாளரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதனடிப்படையில் கள ஆய்வின்படி கிராம ஊராட்சிகளில் சொத்து வரி இரசீது மற்றும் நீலவரைபட அனுமதி இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இதனால் ஊராட்சிகளுக்கு பெரும் நிதி இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. எனவே,சொத்து வரி இரசீது பெறப்பட்ட பின்னர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+