புதுசா வந்த பால்சன்.. பஞ்சர் கடை ஓனரை பயங்கர சம்பவம் செய்த சரண்யா.. சென்னையில் நடுரோட்டில் பரபரப்பு
சென்னை: சென்னையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவரை சரமாரியாக வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வீரக்குமார், ராயப்பேட்டையில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். கடை அருகே வசித்து வந்த திருமணமான சரண்யா என்பவருடன் வீரக்குமார் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவரும் தற்போது பிரிந்து வாழும் நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளி பால்சனுடன் சரண்யா தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை ஒரு கட்டத்தில் அறிந்து கொண்ட வீரக்குமார் சரண்யாவை அவதூறாக பேசியுள்ளாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த சரண்யா, வீரக்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அது குறித்து பால்சனிடமும் கூறியுள்ளார். இந்த நிலையில் வீரக்குமார், இரவில் கடையை மூடிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது போதையில் இருந்து பால்சன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

அருகில் இருந்தவர்கள் வீரக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்து விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்தனர்.

அப்போது தான் சரித்திர பதிவேடு குற்றவாளியான பால்சன், ராஜேஷ், வேலு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது தான், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை முயற்சி நடந்தது தெரியவந்தது. இந்த விவாகரத்தில் தொடர்புடைய சரண்யாவை கைது செய்யவும் போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications