Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரிகையாளர்கள் போர்வையில்.. அடையாள அட்டையுடன் கஞ்சா கடத்திய கும்பல்.. மொத்தமாக தூக்கிய போலீஸ்!

பத்திரிகையாளர் பெயரில் கஞ்சா கடத்திய கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பத்திரிகையாளர் என்று கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லோடு வேனை வாங்கி வீட்டை காலி செய்வது போல் நடித்து ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்துள்ளனர். சென்னையில் போலீசார் மடக்கி விசாரிக்கும் போது, பத்திரிகையாளர் என்று கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து தப்பி வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக கஞ்சா, போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை தீவிரமாக தேடி போலீசார், அடுத்தடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னை போரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கஞ்சா கடத்தி வந்த சூர்யா, பிரவீன் ஆகிய இரு இளைஞர்கள் மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

 போலி பத்திரிகையாளர்

போலி பத்திரிகையாளர்

இதையடுத்து கைது செய்யப்பட்ட சூர்யா மற்றும் பிரவீன் ஆகியோரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்களை பத்திரிகையாளர் என்று கூறி போலியான அடையாள அட்டையை காண்பித்துள்ளனர். மேலும் இந்த கும்பலுக்கு திருவேற்காட்டை சேர்ந்த வினோத் குமார் என்பவரே தலைவன் என்பது தெரிய வந்தது. அந்த வினோத் குமார் ஒரு புலனாய்வு பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்வதாகவும் கூறப்பட்டது.

கும்பலின் தலைவன் கைது

கும்பலின் தலைவன் கைது

அதுமட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து, சென்னை புறநகர் பகுதிகளில் இந்த கும்பல் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வினோத் குமாரை தீவிரமாக தேடி வந்த போரூர் தனிப்படை அதிகாரிகள், அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர்கள் தேவராஜ், பாலாஜி உட்பட அனைவரையும் கைது செய்தனர்.

 ஆவடி ஆணையர் விளக்கம்

ஆவடி ஆணையர் விளக்கம்

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆவடி துணை ஆணையர் பாஸ்கரன் கூறுகையில், வினோத் குமார் போலியான பத்திரிகை அடையாள அட்டையை உருவாக்கி, தன்னை சேர்ந்தவர்களுக்கும் அதனை உருவாக்கி கொடுத்துள்ளார். அதன் மூலமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். ரயில் மூலம் கஞ்சா எடுத்து வருவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போலி அடையாள அட்டை

போலி அடையாள அட்டை

இதனால் புதிதாக லோடு வேன் ஒன்றை வாங்கி அதில் வீட்டை காலி செய்து பொருட்களை எடுத்து செல்வது போல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் அந்த வாகனத்தில் நிரப்பி செட் செய்து ஆந்திராவிற்கு சென்று, அங்கிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் இவரிடம் ஏதேனும் விசாரித்தால், தான் ஒரு பத்திரிகையாளர் என்று தனது போலி அடையாள அட்டையை காண்பித்து தப்பித்து வந்துள்ளார்.

ரூ.50 லட்சம் பரிமாற்றம்

ரூ.50 லட்சம் பரிமாற்றம்

கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் வினோத் குமார் வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள், இருசக்கர வாகனம், ஒரு வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வினோத் குமாரின் வங்கி கணக்குகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உறவினர்கள் யாராவது இந்த சம்பவத்தில் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு அவரது நண்பர்கள் உறவினர்கள் வங்கி கணக்கும் சோதனை செய்யப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+