பெண்களை குறிவைக்கும் "செல்ஃபி சைக்கோ".. ஆசைக்கு இணங்காவிட்டால் குடும்பமே காலி.. "உஷார்"
திருமணமான பெண்கள் கோயிலுக்கு வரும் போது அவர்களை குறிவைத்து, அக்கா.. அக்கா.. என பேசி, அவர்களுடன் நட்பாக பழகுவதை வழக்கமாக வைத்திருக்கிறான் புகழேந்தி.
சென்னை: ஸ்மார்ட்ஃபோன்கள் வந்தாலும் வந்தது.. அவற்றை பயன்படுத்தி பல நூதன மோசடிகளும், பல பயங்கர குற்றங்களும் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து தங்களின் ஆசைக்கு இணங்கும்படி அவர்களை மிரட்டுவது, லட்சக்கணக்கில் பணம் பறிப்பது போன்ற குற்றங்கள் மிகச் சாதாரணமாக மாறிவிட்டன.
ஆனால், இப்போது நாம் பார்க்க போகும் சம்பவமோ அதற்கும் மேலே.. எதற்கு ஒரு பெண்ணை புகைப்படம் எடுத்து அதை மார்ஃபிங் செய்ய வேண்டும்.. ஒரே ஒரு செல்ஃபி தான். டோட்டல் ஃபேமிலியே க்ளோஸ் என்பதை போல பல குடும்பங்களை சீரழித்திருக்கிறான் ஒரு சைக்கோ. பெண்கள் தற்போது எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.

அதிர்ச்சி தந்த செல்ஃபி
சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் நடராஜ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு வாரம் இரு முறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடராஜின் செல்போனுக்கு ஒரு ஃபோட்டோ வந்துள்ளது. இதை திறந்து பார்த்த நடராஜ், அதிர்ச்சியில் உறைந்தார். ஏனெனில், அவரது மனைவியுடன் ஒரு இளைஞர் எடுத்த செல்ஃபி புகைப்படம்தான் அது.

போலீஸில் புகார்
இதையடுத்து, அந்த புகைப்படம் வந்த செல்போன் எண்ணை நடராஜ் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய இளைஞர் ஒருவர், "என்னப்பா.. நல்லா இருக்கியா.. உன் மனைவி கர்ப்பம் ஆனதற்கே நான் தான் காரணம்" எனக் கூறி இணைப்பை துண்டித்தார். இதை கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த நடராஜ், உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், அந்த நம்பரை ட்ரேஸ் செய்ததில் அது பெருங்களத்தூரை சேர்ந்த புகழேந்தி (29) என்பவரின் செல்போன் என்பது தெரியவந்தது.

தம்பி.. தம்பி..
இதனைத் தொடர்ந்து, புகழேந்தியின் வீட்டுக்கு சென்ற போலீஸார், அவரை தொக்காக காவல் நிலையத்திற்கு தூக்கி வந்தனர். பின்னர், நடராஜின் மனைவியையும் காவல் நிலையத்துக்கு போலீஸார் வரவழைத்தனர். அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில்தான், புகழேந்தியின் சுயரூபம் தெரியவந்தது. அதாவது, நடராஜின் மனைவி பெருங்களத்தூரில் உள்ள சிவன் கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் போது, புகழேந்தியின் தாயாருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி, புகழேந்தியும் அவரிடம் நட்பாக பேசுவது போல நடித்துள்ளார். ஆனால், அவரது உண்மை குணம் தெரியாத அந்தப் பெண்ணோ, "தம்பி.. தம்பி.." என புகழேந்தியிடம் பழகி வந்திருக்கிறார். இதனிடையே, ஒருகட்டத்தில் தன்னிடம் புகழேந்தி அத்துமீற முயல்வதை தெரிந்து கொண்ட அவர், அந்த உறவை 'கட்' செய்துள்ளார்.

ஆசைக்கு இணங்குவாயா மாட்டாயா..
இதனால் ஆத்திரம் அடைந்த புகழேந்தி, அப்பெண்ணுடன் பழகிய போது எடுத்துக் கொண்ட ஒரு செல்ஃபி புகைப்படத்தை அவரது கணவர் நடராஜுக்கு அனுப்பி குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, புகழேந்தியை செமத்தியாக கவனித்த போலீஸார், அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அப்போது, அதில் பல பெண்களுடன் அவன் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் இருந்தன. விசாரணையில், திருமணமான பெண்கள் கோயிலுக்கு வரும் போது அவர்களை குறிவைத்து, அக்கா.. அக்கா.. என பேசி, அவர்களுடன் நட்பாக பழகுவதை வழக்கமாக வைத்திருக்கிறான் புகழேந்தி. பின்னர் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வான். அதன் பின்னர்தான், தனது சுயரூபத்தை புகழேந்தி காட்ட தொடங்குவானாம்.

குடும்பத்தை சீரழிக்கும் சைக்கோ
அதாவது, தனது ஆசைக்கு இணங்குமாறு அந்தப் பெண்களை வலியுறுத்தும் புகழேந்தி, அப்படி செய்யாதவர்களை அந்த செல்ஃபி புகைப்படத்தை காட்டி மிரட்ட தொடங்குவான். நான் சொல்வதை கேட்காவிட்டால், உனது கணவருக்கு நமது செல்ஃபி புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் என மிரட்டுவான். இதனால் பல பெண்கள் பயந்து போய், வேறு வழியில்லாமல் அவனது ஆசைக்கு இணங்கி வந்துள்ளனர். ஆனால் அப்படியும் மசியாத சில பெண்களின் கணவர்களுக்கு செல்ஃபி ஃபோட்டோக்களை அனுப்பி குடும்பத்தை பிரிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்திருக்கிறான் புகழேந்தி. இந்நிலையில், புகழேந்தியின் வாக்குமூலத்தை பதிவு செய்த தாம்பரம் போலீஸார், நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications