கோயம்பேடு மேம்பாலத்தில் பதைபதைப்பு! இளம்பெண்ணை தாக்கிய நபர்.. பரவிய வீடியோ- ஆக்ஷனில் சென்னை போலீஸ்!
சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஒருவர் தாக்கியதில் இளம்பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர் ஹெல்மெட்டால் அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கியதில் மூர்ச்சையாகி உள்ளார் இளம்பெண்.

அப்போது அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், மயங்கிய இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர் தாக்கியதில் இளம்பெண் மயங்கிக் கிடந்த வீடியோ வைரலான நிலையில் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டது.
கோயம்பேடு மேம்பாலம் வழியாகச் சென்றவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ பரவிய நிலையில், சென்னை பெருநகர காவல்துறையை குறிப்பிட்டு சிலர் புகார் தெரிவித்தனர். ஆன்லைனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் காணப்படும் ஆண் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரோஷன் மற்றும் அந்தப் பெண் அவரது மனைவி என்றும், அந்தப் பெண்ணை தாக்கியதாக, எப்ஐஆர் பதிவு செய்து, ரோஷனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications