பெட்ரூமில்.. அசையாமல் கிடந்த பபிதா.. சோற்றை கிளறியதும் "காகமாய்" வந்த பியூட்டிஷியன்.. திணறிய சென்னை

மனைவியை கொன்ற கணவரை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிபோதை கண்ணை மறைக்க, அது கொலை வரை சென்றுவிட்டது.. புத்தாண்டு தினத்தன்று மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் இளம்பெண் ஒருவர்..!!

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்தவர் நந்தகுமார்... இவர் அம்பத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
மனைவி பெயர் பபிதா.. 31 வயதாகிறது.. இவர் ஒரு பியூட்டிஷியன்.. சொந்தமாகவே, ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார்.. கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகிறது.. இவர்களுக்கு 9 வயதில் பெண்குழந்தையும் 7வயதில் ஆண்குழந்தையும் உள்ளனர்.

 அலங்கோலம்

அலங்கோலம்

புத்தாண்டை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே, கடந்த 31ம் தேதி இரவே, பபிதாவை மணலியில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார் நந்தகுமார்.. அன்றைய தினம் இரவே, படகில் கடலுக்குள் சென்று விடிய விடிய தண்ணி அடித்துள்ளார்.. பிறகு, நண்பர்களை தண்டையார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கும் அழைத்து வந்து, தண்ணி அடித்துள்ளார்.. மறுநாள் மதியம் பபிதா, அம்மா வீட்டில் இருந்து கிளம்பி, தண்டையார்பேட்டை வீட்டிற்கு வந்து பார்த்தால், வீடே அலங்கோலமாக கிடந்துள்ளது.. ஒரே நாளில் வீட்டை இப்படியா அலங்கோலமாக போட்டு வைப்பது? என்று கோபப்பட்டு தம்பதியிடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 மெத்தையில் பிணம்

மெத்தையில் பிணம்

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியும்விட்டது.. ஆத்திரம் அதிகமாகிவிட்ட நிலையில், நந்தகுமார், பபிதாவை புடவையால் கழுத்தை நெரித்து, படுக்கையின் மீது தள்ளி விட்டு, போதையில் தூங்க போய் விட்டார். அதற்கு பிறகு, 2 குழந்தைகளும், அம்மாவை எழுப்பி உள்ளன.. நீண்ட நேரமாக பபிதா அசைவே இல்லாமல் விழுந்து கிடந்ததை பார்த்து, பயந்து போன குழந்தைகள், அப்பாவை எழுப்பி சொல்லி உள்ளனர்.. நந்தகுமாரும் போதையுடனேயே எழுந்துவந்து, பபிதாவை உலுக்கி பார்த்தும் பலனில்லை.. உடனடியாக, மூச்சற்ற நிலையில் கிடந்த பபிதாவை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.. ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

 போஸ்ட்மார்ட்டம்

போஸ்ட்மார்ட்டம்

மேலும் பபிதாவின் கழுத்தில் நெறிக்கப்பட்டதற்கான அறிகுறிகள், நிறைய காயங்களை பார்த்த டாக்டர்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளன்ர.. ஆர்கே நகர் போலீசார் விரைந்து வந்து, நந்தகுமாரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தபோதுதான், நடந்த சம்பவத்தையெல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னார்.. நாள் முழுக்க, தண்ணி அடித்து கொண்டே இருந்தாராம் நந்தகுமார்.. பபிதா தற்கொலைக்கு முயன்று கீழே விழுந்துவிட்டதாக, மாமியார் வீட்டுக்கு தகவல் சொன்னாராம் நந்தகுமார்.. எனவே, போலீஸாரும் சந்தேக மரணம் என்றே வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியுள்ளனர்..

 பபிதா லவ்

பபிதா லவ்

ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் பபிதாவின் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டதுதான், மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டதால்தான், நந்தகுமாரிடம் தங்கள் பாணி விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.. இதுகுறித்து போலீஸார் சொல்லும்போது, "பபிதாவும் நந்தகுமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.. புத்தாண்டு தினத்தன்று நந்தகுமார், தன்னுடைய நண்பர்களுடன் வீட்டிலேயே மது அருந்தியிருக்கிறார். அதை பபிதா கண்டித்திருக்கிறார்...

பெட்ரூமில்

பெட்ரூமில்

அதனால் ஏற்பட்ட தகராறில் பபிதா, "துப்பட்டாவால் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்" என்று அழுதுக்கொண்டே பெட்ரூமுக்கு சென்றாராம்... உடனே, பபிதா பின்னாடியே நந்தகுமாரும் போதையிலேயே பெட்ரூமுக்குள் நுழைந்துள்ளார்.. "நீ ஏன் கஷ்டப்பட்டு தற்கொலை செய்கிறாய்.. நானே உன்னை கொலைசெய்கிறேன் என்று சொல்லி துப்பட்டாவால் பபிதாவின் கழுத்தை நெரித்திருக்கிறார்... இதில் அவர் உயிரிழந்ததும் பபிதா தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியிருக்கிறார். ஆனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் நந்தகுமார் சிக்கிக் கொண்டார்... இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி, நந்தகுமாரை கைதுசெய்து ஜெயிலில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

 காக்கா காக்கா

காக்கா காக்கா

பபிதாவின் உடலை அடக்கம் செய்த மறுநாள், காகத்திற்கு உறவினர்கள் சோறு வைத்துள்ளனர்.. அப்போது நீண்ட நேரமாக காகம் சோறு எடுக்கவேயில்லையாம்.. அங்கேயே ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்துள்ளது.. பபிதாவின் அம்மா, தன்னுடைய மகளை நினைத்து சோற்றை கிளறி வைத்த அடுத்த செகண்டே, காகம் வந்து சோறு தின்று சென்றதால், தங்கள் மகள் காகம் உருவத்தில் வந்ததாக கண்ணீருடன் சொல்கிறார்.. காகமாக வந்தது தன்னுடைய மகள் பபிதா என்று உறுதியாக அவர் நம்பும் நிலையில், பபிதாவின் கழுத்தில் இருந்த காயங்களே அவர் கொல்லப்பட்டதை காட்டி கொடுத்தது என்கிறார்கள் போலீசார்..!

சைட் டிஷ்கள்

சைட் டிஷ்கள்

சம்பவத்துக்கு முதல்நாள், அதாவது டிசம்பர் 31ம் தேதி முதல், ஜனவரி 1ம் தேதி மதியம் வரை தண்ணி அடித்துள்ளார் நந்தகுமார்.. நண்பர்களுடன் காசிமேடு சென்று படகில் கடலில் சுற்றியுள்ளார்... கடற்கரையை சுற்றிபார்த்துவிட்டு, மாலை 3 மணிக்கு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்த நந்தகுமார், அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்... மாலை 5 மணிக்கு, நண்பர்கள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு, அதற்கு பிறகுதான் பபிதாவுக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்தாராம்.. பபிதா குழந்தைகளுடன் வீட்டுக்கு மாலையில் வந்துள்ளார். அப்போது, காலி மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், சைட் டிஷ்கள் என வீடு முழுக்க சிதறி கிடந்துள்ளது.

முறிந்த எலும்பு

முறிந்த எலும்பு

இதை பார்த்துதான் ஆத்திரமடைந்துள்ளார் பபிதா.. இன்னொரு முறை இப்படி நடந்து கொண்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அழுதுகொண்டே பபிதா சொல்லவும்தான், நீ எதுக்கு தற்கொலை செய்து கொள்கிறாய், நானே உன்னை கொலை செய்கிறேன் என்று சொல்லி, புடவையால் கழுத்தை நெரித்துள்ளார். பபிதா கட்டிலில் சாய்ந்ததும், வீட்டில் சிதறி கிடந்த காலி மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், சைட் டிஷ்களை நந்தகுமார் சுத்தம் செய்தாராம்.. அதற்கு பிறகு, இன்னொரு பெட்ரூமில் போய் படுத்து தூங்கிவிட்டார்.. இறுதியில் பபிதாவின் கழுத்தில் முறிந்த எலும்புகள்தான், நந்தகுமாரை காட்டி தந்தது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+