சென்னை மக்களே இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க.. கண் கொத்தி பாம்பாக இறங்கிய போலீஸ்! என்ன மேட்டர்
சென்னை: தலைநகர் சென்னையில் போலீசார் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் ரெடியாகி வருகின்றனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
உலகெங்கும் டாப் நாடுகள் இணைந்து பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்கும். அதன்படி சர்வதேச அளவில் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் அமைப்பு தான் ஜி 20 கூட்டமைப்பு.
மற்ற கூட்டமைப்புகளைக் காட்டிலும் இது மிக மிக முக்கியம். உலக வர்த்தகத்தில் சுமார் 80% இந்த நாடுகளில் நடக்கிறது.. மக்கள்தொகையிலும் 3இல் 2 பங்கு மக்கள் இந்த ஜி20 நாடுகளில் தான் இருக்கிறார்கள்.

ஜி20 அமைப்பு: இப்படி சர்வதேச அளவில் வலிமையான அமைப்பாக ஜி20 அமைப்பு இருக்கிறது. இதனால் இந்தக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் சர்வதேச அளவில் முக்கியமானதாக இருக்கும்.. இந்த ஜி20 நாடுகளில் இருந்தே ஒரு நாடு தலைமை பொறுப்பிற்கு வரும். ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஒரு நாட்டிற்குத் தலைமை பொறுப்பு வழங்கப்படும். கடந்தாண்டு இந்தோனேசியா தலைமை பொறுப்பில் இருந்தது. அங்கே பாலியில் உச்சி மாநாடு கடந்த செப். மாதம் நடந்தது.
இந்தோனேஷியாவுக்கு பிறகு இப்போது இந்தியா இந்த தலைமை பொறுப்பிற்கு வந்துள்ளது. ஜி20 உச்சி மாநாடு ஆண்டின் எப்போதும் ஆண்டின் இறுதியில் நடக்கும். இந்தாண்டு செப். 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் இந்த ஜி20 மாநாடு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாட்டிற்கு முன்பு, ஆண்டு முழுக்க பல துறைகள் சார்ந்த மாநாடுகள் நடக்கும். அதன்படி இப்போது இந்தியாவில் பல இடங்களில் இந்த மாநாடு நடந்து வருகிறது.
மாநாடு: ஜி20 நாடுகளின் அறிவியல் மாநாடு சமீபத்தில் தான் கோவையில் நடந்து முடிந்தது. இதனிடையே அடுத்த கட்டமாகப் பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடு நாளை முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் கிண்டி மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.
இந்த குழு ஜூலை 26 மற்றும் 28 என்று இரண்டு நாட்கள் மாமல்லபுரம் கடல் சிற்பங்களைப் பார்வையிட உள்ளனர். இதற்கிடையே வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பு தர நடவடிக்கை தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு பகுதியைத் தமிழ்நாடு பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பாளர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொல்லை தராமல் பாதுகாப்புப் பணிகளைச் செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.

தடை: இதற்கிடையே இன்று (ஜூலை 23) முதல் 26ஆம் தேதி வரை 4 நாட்கள் சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜி-20 பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், விழா நடக்கும் இடங்கள், அவர்கள் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளிலும் வழித்தடங்களிலும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதித்து சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
தடையை மீறி ட்ரோன்களை பறக்க விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநாடு நடைபெறும் ஈசிஆர் சாலையில் செல்லும் வாகனங்களை போலீசார் பரிசோதனை செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளனர்.
-
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது!












Click it and Unblock the Notifications