ஒரே அடியாய் தூக்கியடிக்கப்பட்ட ஆய்வாளர்கள்..ஒரே இரவில் சென்னையில் மெகா ஆக்சன்! கமிஷனர் அருண் அதிரடி!
சென்னை: சென்னையில் பணியாற்றும் 73 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் அரங்கேறி உள்ளது காவல் துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் தலைநகரம், தமிழகத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் கடந்த சில தினங்களாகவே குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செயின் பறிப்பு சம்பவங்கள், பாலியல் அத்துமீறல், திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
சென்னை ஒருங்கிணைந்த காவல்துறையாக இருந்த நிலையில் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்கங்கள் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் பல கொலைகள் அரங்கேறிய நிலையில் சென்னை காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் சென்னையில் பல்வேறு குற்ற சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே என்கவுண்டர் உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறின. இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக செயின் பறிப்பு, கொலை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் மீண்டும் அதிகமாகி வருகிறது. மேலும் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் சென்னை காவல் துறையில் அதிரடி மாற்றம் அரங்கேறி இருக்கிறது. சென்னை காவல் துறையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஒரே நாள் இரவில் மாற்றப்பட்டு இருக்கின்றன.

துரைப்பாக்கம், சாஸ்திரி நகர், ஐஸ் ஹவுஸ், ஐசிஎப், வாஷர்மேன்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் உள்ளிட்ட 73 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாது, அனைத்து மகளிர் காவல் நிலையம், க்ரைம், குற்றப்பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல்துறைகளிலும் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஒரே அடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். ஒரே நாள் இரவில் அரங்கேறியுள்ள இந்த பணியிட மாற்றம் காவல் துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்களும் மாற்றப்படலாம் என்கின்றனர் விபரம் அறிந்த காவல்துறை வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications