சென்னையில் ஒரே நேரத்தில்.. 130 இடங்களில் வாகன தணிக்கை! போலீசார் 'ரெட்' பாதுகாப்பு ஒத்திகை
சென்னை: பயங்கரவாத நடவடிக்கை தொடர்பான எச்சரிக்கை வந்தால் காவல்துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான 'ரெட்' பாதுகாப்பு ஒத்திகையை சென்னையில் போலீசார் மேற்கொண்டனர். இதனால் ஒரே நேரத்தில் சுமார் 130க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரே நேரத்தில் அடையாறு, பரங்கிமலை, தியாகராய நகர், மத்திய கைலாஷ் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

பயங்கரவாத அச்சுறுத்தல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் 'ரெட்' பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், முக்கிய சந்திப்புகள், ரயில் நிலையங்கள் என அனைத்து இடத்திலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்படும். வாகனங்களை சோதனை செய்தல், சிசிடிவி கண்காணிப்பு அதிகரித்தல், மெட்டல் டிடெக்டர்களை கொண்டு சோதனை செய்யப்படும்.
பாதுகாப்பு அமைப்புகளின் தயார் நிலையை பரிசோதிக்கவும், அச்சுறுத்தல்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன உள்ளிட்டவையை தெரிந்துக்கொள்வதற்கும் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படும்.
அப்படியான ஒத்திகையில்தான் சென்னை தெற்கு மண்டலத்தில் போலீசார் இன்று ஈடுபட்டிருந்தனர். 130க்கும் அதிகமான இடங்களில் தலா நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. முடிந்தவரை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சோதனையின்பொது இருச்சக்கரவாகனங்களின் உரிமையாளர் யார்? எந்த நோக்கத்திற்காக பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்? வாகனத்தின் உரிமம் சரியாக இருக்கிறதா? வானங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் என்ன? என்பது சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் திருவான்மியூர், அடையாறு, தி.நகர், பரங்கிமலை, மத்திய கைலாஷ் என பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
வழக்கமாக வெள்ளிக்கிழமை, சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் சென்னையில் வாகன சோதனை அதிகமாக இருக்கும். காரணம் குடிபோதையில் விபத்துக்கள் நடப்பது இந்த நாட்களில்தான் என்பதால் சோதனையும் அதிகமாக இருக்கும். ஆனால் இன்று நடத்தப்பட்ட சோதனையை யாரும் எதிர்பார்க்கவில்லை.
சர்வதேச அளவில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே இன்று நடந்த ரெட் பாதுகாப்பு ஒத்தி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications