என்னாது 10 நிமிடத்தில் உணவு டெலிவரியா?.. ஜொமேட்டோ அறிவிப்பு குறித்து காவல் துறை பதில்!
சென்னை: ஜொமேட்டோவின் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி சேவை சென்னையில் அறிமுகம் இல்லை என காவல் துறை விளக்கமளித்துள்ளது.
10 நிமிடங்களுக்கு உணவு டெலிவரி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக ஜொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் அண்மையில் ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு கிண்டலும் கேலியும் கண்டனமும் எழுந்தது.
10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்பது சாத்தியமற்றது என்றும் டெலிவரி செய்யும் நபருக்கு கூடுதல் மன அழுத்தத்தை கொடுக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

உணவு சமைத்தல்
ஒவ்வொரு உணவும் சமைப்பதற்கு என ஒரு குறிப்பிட்ட கால அளவு உள்ளது. அந்த அளவில் சமைத்தால் மட்டுமே உணவின் தரம் நன்றாக இருக்கும். அப்படியிருக்கும் போது உணவு ஆர்டர் செய்த 10 ஆவது நிமிடத்தில் டெலிவரி என்றால் அது உணவின் தரம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

10 நிமிடத்தில் டெலிவரி
10 நிமிடத்தில் டெலிவரி என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக டெலிவரி செய்யும் நபர் வேகமாக செல்வதால் சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை கொண்டனர். இந்த நிலையில் ஜொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்பு தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறையிடம் புகாரளிக்கப்பட்டது.

இ காமர்ஸ் சேவை
இதையடுத்து சென்னையில் உள்ள இ காமர்ஸ் சேவை விநியோக மேலாளர்கல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜொமேட்டோ சார்பிலும் பிரதிநிதி கலந்து கொண்டார். இதுகுறித்து காவல் துறை சார்பில் கூறுகையில் ஜொமேட்டோவின் 10 நிமிட டெலிவரி திட்டம் சென்னையில் அறிமுகம் இல்லை.

இந்தியாவில் சில நகரங்கள்
இந்தியாவில் சில நகரங்களில் முன்னோடி திட்டமாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது . குறிப்பிட்ட விநியோக நேரம் தொடர்பான எந்த கிசட்டமும் போலீஸ் ஒருங்கிணைப்புடன் தொடங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications