வளசரவாக்கத்தில் 6 ஆண்டாக விபச்சாரம்.. முன்னணி நடிகைக்கு ஒரு மணி நேரத்திற்கு ரேட் பேசிய "போலீஸார்"
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் ஒரு குடியிருப்பில் சீரியல் நடிகைகளை வைத்து 6 ஆண்டுகளாக விபச்சாரம் நடந்து வந்த நிலையில் துணை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் பிழைப்புக்காக வேலை தேடி கிராமங்களில் இருந்து நிறைய இளம்பெண்கள் வருகிறார்கள். அவர்களை சிலர் சினிமாவிலும், சீரியல்களிலும் நடிக்க வைப்பதாக கூறி ஆசைவார்த்தை காட்டுகிறார்கள்.

சினிமா இயக்குநர் வந்திருப்பதாக கூறி யாரோ ஒருவரை காட்டி அடுத்த படத்திற்கு நீதாம்மா ஹீரோயின் என சொல்லி அந்த இளம்பெண்ணை மூளைச் சலவை செய்து படுக்கையை பகிர வைக்கிறார்கள். இது தொடர்கதையாகிறது.
இதன் மூலம் நிறைய பணம் கிடைப்பதால் ஏழை மக்கள் தங்கள் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு விபச்சாரத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுகிறார்கள். இவர்களை போல் சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் இது போல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அது போல் மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள் என்ற பெயரிலும் விபச்சாரம் நடக்கிறது. சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு அடிக்கடி ஒரு வீட்டிற்கு மட்டும் இளைஞர்கள் சென்று வருகிறார்கள் என தகவல் கிடைத்தது. இதையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் ரகசிய தகவல்களை கொடுத்தனர்.
இதையடுத்து குடியிருப்புக்குள் சென்ற போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர். அதில் 6 ஆண்டுகளாக விபச்சார தொழில் நடந்து வருவதாக தெரிகிறது. இதையடுத்து இவர்களை கைது செய்ய போலீஸ் கெட்டப்பில் சென்றால் தப்பிவிடுவர் என்பதால் வாடிக்கையாளர் போல் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது மறுமுனையில் பேசிய நபர் ஒருவர் முன்னணி நடிகைகள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ 25 ஆயிரம் , துணை நடிகைகளுக்கு ரூ 10 ஆயிரம் என கூறியுள்ளார். முன்னணி நடிகை வேண்டும் என்றால் ஒரு நாள் முன்பே சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இப்போதைக்கு துணை நடிகை மட்டும்தான் இருக்கிறார்.

அவர் வேண்டுமென்றால் ரூ 10 ஆயிரம் செலவாகும் என கூறியுள்ளார். இதையடுத்து அந்த துணை நடிகை தனக்கு ஓகே என சொல்லிய போலீஸ்காரர், வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து காவலர் ஒருவரை வாடிக்கையாளர் போல் முதலில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுப்பினர்.
அவரை மற்ற போலீஸார் மாறுவேடத்தில் பின்தொடர்ந்து வந்தனர். அப்போது அங்கு ஒரே ஒரு துணை நடிகை மட்டும் இருந்தார். அவரை போலீஸர் கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications