ஒரு பாக்கெட் குட்கா வச்சிருந்தாலும் முடிஞ்சுது.. டோட்டலா காலி பண்ணுங்க.. ஆக்ஷனில் சென்னை போலீஸ்!
சென்னை: போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்ஷனை கையில் எடுத்துள்ளது. கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகளவில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. காவல்துறையினர், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனையின் படி 'புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை' என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களில் பல இடங்களில் டன் கணக்கில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூரில் குட்காவை பதுக்கி வைத்திருந்த குடோனில் இருந்து சுமார் 2 ஆயிரம் கிலோ குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னை முழுவதும் பல இடங்களுக்கு குட்கா சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில், குடோனை சீல் வைத்துள்ளனர் சென்னை போலீசார்.
தொடர்ச்சியாக, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கவும், பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்கவும் சென்னை மாநகர போலீசார் ஆக்ஷனை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் குட்கா வாங்கிய கடைகள் தொடங்கி, மொத்த விற்பனை செய்த இடம், குடோன் வரை கூண்டோடு சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கஞ்சாவை தொடர்ந்து குட்கா, பான் மசாலா, கூல் லிப் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நாட்களில் போதைப் பொருள் தடுப்பு வேட்டை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த சென்னை போலீசார் எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு தமிழக மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications