தன்னுடன் பழகிய பெண்ணின் ஆபாச வீடியோக்களை.. சென்னை இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!
சென்னை: சென்னையில் தன்னுடன் பழகிய பெண்ணின் ஆபாச வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்து இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் திருமணம் நின்றுவிட்டது. ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் அந்த இளைஞர் ஆபாசமாக எடுத்த வீடியோக்களை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் வாணி வயது 22 (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) இவருக்கும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த முகமது அசேன் 29 என்ற நபருக்கும் கடந்த 13ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பிறகு அது நிறுத்தப்பட்டது.

தவறான வீடியோ
திருமணம் நின்றுவட்டதால் வாணிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது இந்நிலையில் முகமது அசேன் ஏற்கனவே வாணிவுடன் வீடியோ காலில் பேசியபோது சில தவறான வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளார்

இளம் பெண் புகார்
திருமணம் நின்று விட்டது என்ற நிலையில் சமீபத்தில் அந்த வீடியோக்களை தனது நண்பர்களுடன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் வாணி சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

உறுதி
புகாரின் பேரில் சென்னை ஓட்டேரி போலீசார் முகமது அசேனை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் வாணியின் ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்கு பரிமாறியது உறுதிப்படுத்தப்பட்டது.

உசேன் கைது
இதனையடுத்து இந்த வழக்கை புளியந்தோப்பு அனைத்து காவல் நிலையத்திற்கு மாற்றினர் அதனடிப்படையில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முகமது அசேன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications