போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இந்நிலையில் தான் சென்னை மெரினாவில் திமுகவுக்கு ஆதரவாகவும், தவெகவிற்கு எதிராகவும் பதாகைகள் ஏந்தி பிரசாரம் செய்த 'பிக்பாஸ்' பிரபலமான நடிகை ஜூலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த விசாரணைக்கு பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் தான் உள்ளது. இந்நிலையில் தான் அனைத்து கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பிரசாாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தல் பிரசாரங்களில் நடிகை, நடிகைகள் பலரும் தங்களுக்கு விருப்பம் உள்ள கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 'பிக்பாஸ்' பிரபலமும், நடிகையுமான ஜூலி தொடர்ந்து விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சனம் செய்து வருகிறார். விஜயின் அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலில் போட்டியிடும் நிலையில் ஜூலி அந்த கட்சியினரை தாக்கி பேசி வருகிறார்.
திமுகவுக்கு ஆதரவு பிரசாரம்
இந்நிலையில் தான் நடிகை ஜூலி இன்று சென்னை மெரினாவில் பிரசாரம் மேற்கொண்டார். கருப்பு - சிவப்பு ஆடை அணிந்து அவர் பிரசாரம் செய்தார். திமுகவுக்கு ஆதவாகவும், விஜயின் தவெகவிற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை அவர் கையில் ஏந்தியிருந்தார். ஒரு பதாகையில் Vote For DMK என எழுதி வைத்திருந்தார்.
தவெகவிற்கு எதிராக பிரசாரம்
இன்னொரு பதாகையில் அணில் படம் போடப்பட்டு அதன் மீது X சிம்பள் இருந்ததோடு, அந்த பதாகையில் 'பெண்களுக்கு இவர்களால் பாதுகாப்பு இல்லை'' என்று எழுதி வைத்திருந்தார். இதன்மூலம் மறைமுகமாக அவர் விஜயின் தவெகவிற்கு எதிராக பிரசாரம் செய்திருந்தார். தொடர்ந்து விஜயின் தவெகவினரை சீண்டி வரும் ஜூலியின் இந்த செயல் அந்த கட்சியினரை மீண்டும் கோபப்படுத்தியது.
மெரினா தேர்வு ஏன்?
மேலும் இதுதொடர்பான போட்டோவை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். அதில் 'எங்கு தொடங்கினோமோ அங்கேயே''என்று கேப்ஷன் கொடுத்து இருந்தார். ஜூலி மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக தான் பிரபலமானார். அதன்பிறகு தான் பிக்பாஸ் வாய்ப்பு மற்றும் சினிமா வாய்ப்புகள் அவரை தேடி சென்றன. இதனால் அவர் தனது தேர்தல் பிரசாரத்துக்கும் மெரினாவை இன்று தேர்வு செய்திருந்தார்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில் தான் ஜூலியை சென்னை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். பொதுவாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றால் தேர்தல் அதிகாரியிடம் அதற்கான இடம், நேரம் உள்ளிட்டவற்றை வழங்கி அனுமதி பெற வேண்டும். ஆனால் ஜூலி எந்த அனுமதியும் இன்றி பொதுஇடமாக சென்னை மெரினாவில் பிரசாரம் செய்துள்ளார். இதுபற்றி தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஜூலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications