சென்னையில் பிரபல ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் கைது.. அமித் ஷாவை சந்தித்த சில நாட்களில் ஆக்ஷன்!
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் வெங்கடேசன். இவர் அண்மையில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்றிருந்தார்.
சென்னை பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய் பொடி வெங்கடேசன். ரௌடி வெங்கடேசன் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களில் செம்மரம் கடத்தியதாகவும், அதிகாரிகளை தாக்கியதாகவும், மிரட்டல், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதாகவும் 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதில் ஆந்திரா, தெலுங்கானாவில் செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஆந்திரா போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர், ஆந்திராவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். இவர் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
மிளகாய்பொடி வெங்கடேசன் பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த உடனேயே மிளகாய்பொடி வெங்கடேசன் கட்சி நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு பலனாக பாஜக தலைமை, மிளகாய்பொடி வெங்கடேசனுக்கு பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவி வழங்கியது.
இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள் போட்டி போட்டு விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில், முக்கிய நிர்வாகிகள் ஆதரவுடன் அமித்ஷாவை வரவேற்க நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றார் மிளகாய் பொடி வெங்கடேசன்.
மிளகாய் பொடி வெங்கடேசன், அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் சால்வை கொடுத்து வரவேற்றார். செம்மரக்கட்டை கடத்தல் உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் பட்டியலில் உள்ளவரை அமித்ஷா சந்தித்த விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமித்ஷாவை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் மிளகாய் பொடி வெங்கடேசன். அதில், ஆவடி காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஆந்திர காவல்துறை, தெலுங்கானா காவல்துறை என அனைவரையும் டேக் செய்திருந்தார்.
இந்நிலையில் ரௌடி மிளகாய்ப் பொடி வெங்கடேசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் வைத்து மிளகாய் பொடி வெங்கடேசனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications