Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழுப்புரம் கள்ளக்காதலன் பற்றி கணவருக்கு கடிதம் அனுப்பிய சென்னை பெண் போலீஸ்.. கடைசி நாளில் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்த சோனியா என்பவர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன் என்பவரும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் காவலர் சோனியா தனது கள்ளக்காதலன் பற்றி கணவருக்கு கடிதம் அனுப்பிவிட்டு எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது. நெருங்கி பழகி 3 மாத கர்ப்பமான பிறகு திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கணவருக்கு கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. இருவரும் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகள் குறையும். மாறாக ஈகோ, அடிமைத்தனம் மூலம் கட்டுப்படுத்த நினைத்தால் கடைசியில் சிக்கலில் முடியும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கணவன் மனைவி பிரிந்து வாழ்கிறார்கள். அப்படிபிரிந்து வாழும் பெண்களை சிலர் ஆறுதல் கூறுவது போல் வந்து ஏமாற்றி வலையில் வீழ்த்துகிறார்கள். சென்னை காவலருக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

Chennai police sends last letter to husband about Villupuram lover

கடலூர் காவலர்

கடலூர் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்த 26 வயதாகும் சோனியா என்பவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை சேர்ந்த 27 வயதாகும் முகிலன் என்பவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள்.. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

கருத்து வேறுபாடு

கணவன்-மனைவி இடையே திடீரென கருத்து வேறுபாடு காரணமாக முகிலனும், சோனியாவும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். முகிலனுடன் அவரது மகள் இருந்திருக்கிறார். இதனிடையே சோனியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கொங்கராயனூருக்கு சென்றுள்ளார். பின்னர் 4 நாட்களுக்கு முன்பு முகிலனை செல்போனில் தொடர்பு கொண்டு மகளை பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.

கடைசி நாளில் உருக்கம்

இதையடுத்து முகிலன், சோனியா ஆகியோர் தங்கள் மகளுடன் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு சுற்றி பார்த்துள்ளனர். தொடர்ந்து கடந்த ஜூலை 1-ந்தேதி காலை சோனியா, முகிலனை தொடர்பு கொண்டு தான் மருந்து குடித்துவிட்டதாகவும், மகளை நன்றாக பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாராம்.

முகிலன் விரைந்தார்

இதை கேட்டு பதறிப்போன முகிலன், உறவினர்களுடன் கொங்கராயனூருக்கு விரைந்து சென்றார். அங்கு மயங்கி கிடந்த சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சோனியா கடந்த ஜூலை 2ம் தேதி உயிரிழந்தார்.

காவலர் எழுதிய கடிதம்

வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முன்பாக சோனியா தனது கைப்பட கடிதம் எழுதி செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வாட்ஸ்-அப் மூலம் கணவர் முகிலனுக்கு அனுப்பியிருக்கிறார். அதில் சோனியா கூறுகையில், " சென்னை ஆவடியில் பணிபுரிந்த போது, அங்குள்ள ஒரு காவலருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியதில், நான் 3 மாத கர்ப்பமானேன்.

கர்ப்பத்தை கலைக்க வலியுறுத்தல்

இதுபற்றி அறிந்த அந்த நபர் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்றும், கணவர் முகிலனிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் எனவும், கர்ப்பத்தை கலைத்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் என்னை மிரட்டினார். இதுதொடர்பாக புகார் அளித்தபோது, உயர் அதிகாரிகள் என்னை மட்டுமே ஒருதலைபட்சமாக விசாரணை செய்தார்கள்.

அதிக பணிச்சுமை

மேலும் அதிகளவில் பணிச்சுமை வழங்கியபடி இருந்தார்கள், இதனால் எனது கர்ப்பம் திடீரென கலைந்துவிட்டது. இதனால் விடுமுறையில் வீட்டுக்கு வந்த நான், அந்த போலீஸ்காரர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதால் மனஉளைச்சலில் இருந்தேன். எனது சாவுக்கு காரணம் அந்த காவலர் மட்டுமே. மேலும் எனது குடும்பத்தினர், கணவர் மற்றும் மகள் யாரையும் விசாரிக்க வேண்டாம். இதுவே எனது மரண வாக்குமூலம் என்று காவலர் கடிதத்தில் கூறியிருந்தார்.

காவலர் கைது

இதுகுறித்து முகிலன், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சோனியாவின் கள்ளக்காதலனான சென்னை ஆவடி ஆயுதப்படை போலீஸ்காரரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜீ (28) மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+