3 வருடம் லிவ் இன் டுகெதர்.. கல்யாணமான 2 நாளில் காவலர் தலைமறைவு... சென்னை பெண் காவலர் தர்ணா
சென்னை: சென்னையில் ஆயுதப்படைப்பிரிவில் இரு காவலர்கள் ஒன்றாக வேலை செய்து வந்த நிலையில் , அவர்களுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், இந்நிலையில் திருமணம் ஆன இரண்டு நாளிலே மனைவி விட்டு காவலர் தலைமறைவாகி விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
சென்னையில் ஆயுதப்டையில் காவலராக இருப்பவர் மதுமிதா. இவருடன் திருவாரூரைச் சேர்ந்த அஜித் என்பவரும் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இருவரும் காவலர்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்தநிலையில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் மதுமிதா மற்றும் அஜித் இடையே காதலாக மாறிவிட்டதாம். அவர்கள் திருமணம் செய்யாமலேயே சென்னையில் ஒரே வீட்டில் மூன்று வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்களாம்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பம் அடைந்ததாகவும், ஆனால் திருமணம் செய்ய அஜித் தயங்கியதாகவும் அந்த பெண் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. திருமணத்தை தவிர்த்த அஜித் திருவாரூர் வந்துள்ளாராம். அங்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஆயுதப்படை பெண் காவலர் மதுமிதாபுகார் அளித்தாராம். அந்த புகாருக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி அன்று மதுமிதாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் அஜித் மதுமிதா ஜோடி மாலை மாற்றி திருமணம் கொண்டார்களாம். பின்னர் பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவும் செய்துள்ளார்களாம்.
இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டு நாளில் நண்பர் வீட்டிற்கு போவதாக கூறிவிட்டு அஜித் சென்றுள்ளாராம். ஆனால் அஜித் திரும்பவும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து திருவாரூர் சென்ற பெண் காவலர் மதுமிதா, காவலர் அஜித் வீட்டிற்கு சென்று அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் என்ன காரணம் என்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் பிரச்சனை குறித்து காவலர் மதுமிதா கூறியுள்ளார். இதுபற்றி திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த பெண் காவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட காவலர் மதுமிதா, திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications